Ad Code

மறைபரப்பு ஞாயிறு | Gospel Sunday| சுவிசேஷ ஞாயிறு

 திருச்சபையால் செப்டம்பர் மாதம் இரண்டாம் ஞாயிறு மறைபரப்பு ஞாயிறாக (சுவிசேஷ ஞாயிறு) ஆசரிக்கப்படுகிறது.  திருச்சபை இறைமக்களுக்கு நற்செய்தி அறிவிதலின் முக்கியத்துவம் குறித்து கற்றுக்கொடுக்கவும், அதற்கு நடைமுறையில் செயல்வடிவம் கொடுக்கவும் இந்த நாளானது ஆசரிக்கப்படுகிறது.


இந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டில் மறைபரப்பு பணி குறித்த ஒரு கருத்தில் அருளுரை ஆற்றப்படும். மேலும் மறைபரப்பு ஊழியங்களுக்காக சிறப்பு ஜெபங்கள் ஏறெடுக்கப்படும். அந்த ஞாயிறோஅல்லது தங்களுக்கு வசதியாக உள்ள ஏதோ நாளிலோ தங்கள் சபைக்கு அருகாமையிலுள்ள ஆலயம் இல்லாத கிராமங்களுக்கு நடந்து சென்று, கைப்பிரதிகள் கொடுத்து, தங்கள் சொந்த சாட்சி களைப் பகிர்ந்து கிறிஸ்துவின் அன்பை அறிவிப்பார்கள். சில சபைகளில் பின் தொடர் ஊழியம் செய்து, வீடுகளில் ஜெபக்குழுக்கள் ஆரம்பித்து நடத்துவார்கள். மேலும் சில சபைகளில் தூர இடங்களுக்கு பிரயானப்பட்டு செல்வார்கள்.  ஆதிகாலத்தில் இந்த நற்செய்தி பணியின் வாயிலாக உருவாகிய ஆலயங்கள் ஏராளம்.


இன்றைக்கு இந்த சுவிசேஷ ஞாயிறானது பலவித கோணங்களில் பொருளற்ற ஒன்றாய் மாறிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சபைகள் இந்த நாட்களில் கூட சுவிசேஷ ஊழியம் செய்யப்போவதில்லை. சில சபைகளில் கடமைக்காக நடைபெறுகிறது. இன்னும் இது ஒரு சுற்றுலா பயணம் போல் மாறி சாப்பாட்டு பண்டிகை என்ற நிலைக்கு வந்துவிட்டது போலும். எக்காளம் ஊதுவது போல் நற்செய்தியை பறைசாற்ற வேண்டிய நாம், இன்றைய சாட்சியற்ற வாழ்க்கை முறைகளால் துரத்தப்படுகிறோம்; கிறிஸ்துவின் நாமம் துஷிக்கப்படுகிறது.


நற்செய்தி நற்சாட்சியில் என்று சிறப்பாய் வாழ்ந்து முனைப்புடன் செயல்படுவோம்.


Post a Comment

0 Comments