வண்ணம்: வெள்ளை
திருமறை பாடங்கள்:
சங்கீதம்: 136
திருவசனம் & தலைப்பு
"அனைவருக்கும் கடவுளின் அன்பை வெளிப்படுத்துதல்"
பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.
1 யோவான் 4:11
ஆசிரியர் & அவையோர்:
இயேசுவின் நெருங்கிய சீடர்களில் ஒருவர்
“அன்பின் அப்போஸ்தலன்” என்று அறியப்படுபவர்
யோவான் நற்செய்தி, 1, 2, 3 யோவான் கடிதங்கள், வெளிப்படுத்தின விசேஷம்
ஆகியவற்றின் ஆசிரியராக ஆரம்ப சபை ஏற்றுக்கொண்டது, கடிதம் முழுவதும் அன்பு, உண்மை, விசுவாசம் என்பவற்றில் வலியுறுத்தி எழுதப்பட்டிருக்கிறது.
எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
காலம்: கி.பி. 90-100 வாக்கில், முதல் நூற்றாண்டு முடிவில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சூழ்நிலை:
பொய் போதனைகளின் தாக்கம்: அப்போது, இயேசு மனித உருவில் வரவில்லை, அவர் ஒரு தெய்வீக ஆற்றல் மட்டுமே என்று நம்பும் 'ஞானவாதக் கொள்கைகள்' (Gnosticism) பரவிக்கொண்டிருந்தன.
சபையில் பிரிவினைகள்: இந்த போதனைகள் சபைகளில் குழப்பத்தையும், பிரிவினைகளையும் ஏற்படுத்தின. இதை தீர்க்கும் வண்ணமாக இந்த யோவானின் கடிதம் அமைந்துள்ளது.
திருவசன விளக்கவுரை:
1 யோவான் 4ம் அதிகாரம் 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது,
இரண்டாம் பகுதியான வசனம் 7 முதல் 21 வரை ஆண்டவரின் ஆழமான அன்பை பற்றி ஆரம்ப கால சபை விசுவாசிகளுக்கு எடுத்துரைக்கிறது.
V 7. அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது அன்புள்ளவன் தேவனால் பிறந்து (அ) மீட்கப்பட்டு அவரை அறிந்திருக்கிறான், சுவாவ அன்பில்லாதவன் தேவனை அறிய முடியாது என்றும் வசனம் நமக்கு தெளிவாய் தெரிவிக்கிறது.
பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.
1 யோவான் 4:11
இந்த வசனம் இரண்டு உட்கருத்துகளை அடக்கியுள்ளது.
1. தேவன் " *இவ்விதமாய்* " நம்மிடத்தில் அன்பு கூர்ந்து இருக்க....
2. நாமும் *"ஒருவரிடத்தில் ஒருவர்" (அ) "அனைவரிடமும்"* அன்பு கூட கடனாளிகளாய் இருக்கிறோம்.
தேவன் எவ்விதமான அன்பை நமக்கு வெளிப்படுத்தினார்.
V .4:9 நாம் பிழைக்கும் படிக்கு தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை இந்த உலகத்திலே அனுப்பி அவர் நம் மேல் வைத்த தியாக அன்பை வெளிப்படுத்தினார்.
V 21. நாம் தேவனிடத்தில் பெற்ற இந்த அன்பை அனைவருக்கும் வெளிப்படுத்த கட்டளை கொடுக்கிறார்.
கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளம் அன்பால் நிரப்பப்பட்டிருக்கிறது, அன்பால் எதையும் செய்ய முடியும் தேவன் அன்பாகவே இருக்கிறார் நம்மையும் அதே அன்பை பிறரிடம் வெளிப்படுத்த அழைக்கிறார்.
இறையியல் & வாழ்வியல்:
நம்முடைய வாழ்வில் அன்பு தணிந்து போகும் காலத்துக்குள்ளாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,
பகை எண்ணம் மேலோங்கி நின்று கொண்டிருக்கிறது எந்த உறவுகளுக்கிடையும் உண்மையான அன்பு இல்லை
மாயமான அன்பில் தான் உலகம் உருண்டு கொண்டிருக்கிறது.
ஆனால் வேதம் நமக்கு உண்மையான தேவனுடைய அன்பையும், நாம் ஒருவரில் ஒருவர் அன்பாய் இருக்க வேண்டும் என்றும்
தேவனிடமிருந்து பெற்ற அன்பை நாம் பிறருக்கு வெளிக்காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது, நாம் தேவனிடம் பெற்ற தியாக அன்பை மன்னிக்கும் அன்பை மறுவாழ்வு கொடுக்கும் அன்பை நாம் பிறருக்கு வெளிப்படுத்துகிறோமா? சொல்லால் அல்ல செயலால்.
அருளுரை குறிப்புகள்:
1. மன்னித்த அன்பை வெளிப்படுத்துவோம்
2. மரணித்த அன்பை வெளிப்படுத்துவோம் (தியாக)
3. மறு வாழ்வளித்த அன்பை வெளிப்படுத்துவோம்
எழுதியவர்
திரு. இம்மானுவேல்
சபை ஊழியர்
பாவூர்சத்திரம்

0 Comments