Ad Code

International Day of Peace | உலக அமைதி தினம்

🐦 உலக அமைதி தினம், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
🐦 இந்நாள் 1981ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. பிறகு 2002ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

🐦 சர்வதேச அமைதி தினம், அமைதியின் இலட்சியங்களை நினைவுகூர்ந்து, அதனை தொடர்ந்து வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படுகிறது.

🐦 இன்று உலகில் பல பகுதிகளில் சமாதானத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், இன்று மட்டுமன்றி ஒவ்வொரு நாட்களுமே மனித வாழ்வில் சமாதானம் நிலைக்க வேண்டும் என்று பேசப்பட வேண்டும்; செயல்பட வேண்டும். 

🐦 நம் கடவுளாகிய இயேசு கிறிஸ்து கற்பித்தார்: (மாற்கு 09.50) "உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்."

Post a Comment

2 Comments

Anonymous said…
Peace be with you
Anonymous said…
Peace will always with me