Ad Code

எப்பிக்கூரர்கள் எப்படிபட்டவர்கள்? | Who are Epicurean?


யார் இந்த எப்பிக்கூரர்கள்

ஜனநாயகக் கொள்கையின் பிறப்பிடமான அத்தேனே பட்டணம், பண்பாடு கல்வி கலை ஆகியவற்றின் மையமாக கருதப்பட்டது பிளேட்டோ, அரிஸ்டாட்டில், எபிக்குரியஸ் மற்றும் ஜனோ போன்ற தத்துவஞானிகள் வாழ்ந்த நகரம் சிற்பக்கலைக்கு பெயர் வைத்த நகரம்.

இப்பேர்ப்பட்ட சிறப்பான இந்த நகரத்தில் கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் பலதரப்பட்ட குழுக்கள் காணப்பட்டன. அவர்களில் ஒரு தரப்பினர் எப்பிக்கூரர்கள் ஆவர். எபிகியூரியனிசம் என்பது பண்டைய கிரேக்க தத்துவஞானி எபிகுரஸின் போதனைகளின் அடிப்படையில் கிமு 307 இல் நிறுவப்பட்ட ஒரு தத்துவ முறையாகும். அவர்களுடைய நம்பிக்கை என்ன பார்ப்போம்.
எப்பிக்கூரர்களின் நம்பிக்கை

▶️இன்ப களியாட்டுகளே (Pleasure of the body & Pleasure of the mind) வாழ்வின் குறிக்கோள்.

▶️ஆடம்பரம் அல்லது சிற்றின்ப இன்பங்களில் ஈடுபடுவது அல்லது விரும்புவது; ஆடம்பரமான சுவைகள் அல்லது பழக்கங்களைக் கொண்டிருத்தல், குறிப்பாக உணவு மற்றும் குடிப்பதில் மிக்க ஈடுபாடோடு செயல்படுதல்.

▶️அமைதியான வாழ்விலும் வேதனை மூட நம்பிக்கைகளினின்று விடுபட்டால், இன்பம் காண இயலும்.

▶️கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவே பெரும் இடைவெளி உண்டு. கடவுள் மனுக்குலத்தின் காரியங்களில் ஈடுபடமாட்டார். தேவர்களின் வெளிப்பாட்டின் மீது (Existence of gods) நம்பிக்கை உண்டு.

▶️மரிக்கும் போது நம் ஆத்துமா அழிந்து போகும்.
 
▶️மறுவாழ்வு கிடையாது.


எப்பிக்கூரர்களின் மத்தியில் பவுல்

அத்தேனே பட்டணத்தில் நற்செய்தி பணியாற்ற வந்த, பவுலடிகளார், ஜெப ஆலயத்தில் யூதரோடும் பக்தி நிறைந்தவரோடும் உரையாடிக் கொண்டிருக்கும்போது இந்த எப்பிக்கூரர்கள் மற்றும் ஸ்தோயிக்கர் ஆகிய மெய்யியல் அறிஞர்கள் சிலர் அவருடன் கலந்து உரையாடினர். வேறு சிலர், "இவன் என்னதான் பிதற்றுகிறான்?" என்றனர். அவர் இயேசுவையும் அவரது உயிர்த்தெழுதலையும் நற்செய்தியாக அறிவித்துவநத்தால் மற்றும் சிலர், "இவன் வேற்றுத் தெய்வங்களைப் பற்றி அறிவிப்பவன் போலத் தெரிகிறது "" என்றனர்.

திருமறை பகுதி:

அப்போஸ்தலர் 17.15 - 34 (18).

எப்பிக்கூரர்கள் & ஸ்தோயிக்கர்கள் வேறுபாடு





Post a Comment

0 Comments