Ad Code

உலக மருந்தாளுநர் தினம் | World Pharmacist's Day

உலகெங்கிலும் செப்டம்பர் 25 ஆம் தேதி மருந்தாளுநர் தினம் (World Pharmacist's Day) கடைபிடிக்கப்படுகிறது. உலகின் அனைத்து பகுதிகளிலும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்தாளரின் பங்கை ஊக்குவிக்கும் வகையில் உலக மருந்தாளுனர் தினம் கொண்டாடப்படுகிறது. 
உலகெங்கிலும் உள்ள மருந்தாளுநர்கள் மக்கள் தரமான சிறந்த மருந்துகளைப் பெற உதவுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும், நோயாளிகளுக்கு மருந்துகளை எப்படி எடுத்துக்கொள்வது என்று அறிவுறுத்தும் நபர்களும் அவர்கள்தான். உலகம் முழுவதும் சுமார் 4 மில்லியன் மருந்தாளுனர்கள் உள்ளனர், அவர்களில் 78 சதவீதம் பேர் பெண்கள். 

செப்டம்பர் 25 அன்று மருந்தாளுநர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? 

மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து விஞ்ஞானிகளின் தேசிய சங்கங்களின் உலகளாவிய கூட்டமைப்பாகிய, சர்வதேச மருந்தியல் கூட்டமைப்பு (FIP), செப்டம்பர் 25, 1912 இல் உருவாக்கப்பட்டது. மருந்துத் தொழில்துறையின் பங்கை பாராட்டுவதோடு, உலகம் முழுவதும் மருத்துவ வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை மக்கள் முழுமையாக அணுக உதவுவதை நோக்கமாகக் கொண்டு, இந்த அமைப்பு குறித்து, துருக்கி மற்றும் இஸ்தான்புல்லின் எஃப்ஐபி கவுன்சிலால் 2009 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது. எனவே தான், செப்டம்பர் 25 அன்று உலக மருந்தாளுநர் தினத்தை கொண்டாடுகிறோம்.

சர்வதேச மருந்து கூட்டமைப்பு (FIP)

சர்வதேச மருந்தியல் கூட்டமைப்பு (எஃப்ஐபி) என்பது மருந்தகம், மருந்து அறிவியல் மற்றும் மருந்து கல்வி ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு உலகளாவிய அமைப்பாகும். நெதர்லாந்தில் அமைந்துள்ளது FIP இன் தலைமை அலுவலகம்.
கல்வி நிறுவன உறுப்பினர்கள் மற்றும் தனிப்பட்ட உறுப்பினர்கள், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மருந்தாளுநர்கள், மருந்து விஞ்ஞானிகள் மற்றும் மருந்தியல் கல்வியாளர்களை, மொத்தம் 144 தேசிய அமைப்புகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 

மருந்தாளுநர்களின் பங்கு மற்றும் பொறுப்புகள் மற்றும் சுகாதார அமைப்பில் அவர்களின் பங்களிப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த கடைப்பிடிக்கப்படும்
இந்த சிறப்பான நாளில் மருந்தாளுநர்களின் முயற்சிகளை எங்கள் அன்பான வாழ்த்துக்களுடன் பாராட்டுவோம்!

Post a Comment

0 Comments