Ad Code

தென்னிந்திய திருச்சபை தினம் | CSI Day 27.09.1947 | Church of South India


தென்னிந்திய திருச்சபை (சிஎஸ்ஐ) என்பது இந்தியாவின் தென்பகுதிகளிலுள்ள புராட்டஸ்டன்ட் சபைகளின் ஒரு ஒருங்கிணைந்த கூட்டமைப்பு ஆகும். இது உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ திருச்சபையாகும். 


ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் 24 திருமண்டலங்களை உள்ளடக்கியுள்ளது. 3,800,000 அங்கத்தினர்கள் உள்ளனர். 27 செப்டம்பர் 1947 என்பது நிறுவப்பட்ட தேதி அல்ல; சபைகள் ஒன்றுகூடிய தினம் (Day of Union) ஆகும். அதன் வரலாற்றைப் படிப்போம்.




உரிமை குரல் - 1910 எடின்பரோ மாநாடு

29 ஜூன் 1909 இல் உதவி குருபட்டமும், அதே ஆண்டு டிசம்பர் 29 இல் குருபட்டமும் பெற்ற Rev. அசரியா ஐயரவர்கள் 1910 ஆண்டு இங்கிலாந்திலுள்ள எடின்பரோவில் நடைபெற்ற அனைத்துலக மிஷனேரி மாநாட்டில் இந்தியாவிலிருந்து சென்றார். அங்கு அவர் ஆற்றிய சொற்பொழிவில் சொன்னது: "பரலோகத்தில் பொன் ஆசனங்களிலிருந்தும் உரிமைகளை பெற்றுக்கொள்ள இந்தியர்களாகிய எங்களை அழைக்கும் மேல்நாட்டு மிஷனரிமார் நாங்கள் கிறிஸ்துமார்க்கத்தை தழுவிய பின், அவர்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் இருக்கும் பிரம்பு நாற்காலிகள் எங்களை உட்கார கேட்கிறதில்லை." என்று பேசினாராம். பின்னர் 29.12.1912 இல் முதல் இந்திய பேராயாரக அபிஷேகிக்ககப்பட்டார். திருச்சபையின் ஒருமைப்பாட்டு சிற்பி என்று அழைக்கப்படும் இவர் தான் தென்னிந்திய திருச்சபை உருவாவதற்கு வித்தட்டவர். 


தரங்கம்பாடி மாநாடு 1919

1919 ஆம் ஆண்டு, மே மாதம் 1, 2 ஆகிய தேதிகளில், தரங்கம்பாடியில் 33 குருமார் கூடி, சபைகளின் ஒருமைபாட்டை வலியுறுத்தி, அனைவரும் கையெழுத்திட்டு, தரங்கம்பாடி அறிக்கையை (The Tranquebar Manifesto) வெளியிட்டனர். இந்திய திருச்சபைகள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும்; இந்திய அருட்பணியாளர்களே ஆள வேண்டும்; என்ற கருத்துக்கள் வலுப்பெற்று இருந்தன.


திருச்சபை ஒருமைப்பாட்டு கூடுகை 1947

KT பால், VS அசரியா மற்றும் V சாண்டியோகா போன்றோர்களின் கூட்டு முயற்சியின் பலனாக, பின்னாளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. 


ஆங்கிலக்கன், மெத்தடிஸ்ட், காங்கிரேஷன்லிஸ்ட், பிரஸ்ப்பைட்டரியன் போன்ற சபைகள் ஒரே ஐக்கியத்தில் வருவதற்கு முன்வந்தன. அதின் விளைவாக, இறையருளால் 27.09.1947 அன்று தென்னிந்திய திருச்சபை தோன்றியது. தனித்துவம்மிக்க தென்னிந்திய திருச்சபையானது, இந்திய மக்களுக்கு கடவுளின் பரிசாகவும், உலகளாவிய திருச்சபை ஒற்றுமையின் புலப்படும் அடையாளமாகவும் எபிஸ்கோபல் (Episcopal) மற்றும் எபிஸ்கோபல் அல்லாத (Non - Episcopal) மரபுகளின் கலவையிலிருந்து வேற்றுமையில் ஒற்றுமைக்கு மாதிரியாக பிறந்தது.



இப்படியாக தென்னிந்தியத் திருச்சபை பல இறையடியார்களின் தரிசனம்மிக்க செயலினால் தாகத்தால் உருவாகி மொழி,நிறம், ஜாதி, ஏழை, பணக்காரன் பேதங்களின்றி ஒன்றினணைக்கப்பட்டது. ஆனால் இன்று நம் திருச்சபையில் ஐக்கியற்ற சூழ்நிலைகள்,போட்டிகள் மற்றும் ஜாதி மொழியின் அடிப்படையில் பேதங்கள் ஏற்பட்டு நம் திருச்சபையின் தரிசனங்கள் தகர்ந்து போய் உள்ளது. திருச்சபையின் அங்கத்தினர்களாக நம் பங்கு என்ன? சிந்தித்து செயல்படுவோம்...

Post a Comment

2 Comments

Anonymous said…
Happy CSI Day
Sarahjency said…
I'am happy to be a member of CSI