உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) வாயிலாக செப்டம்பர் 27ஆம் நாளில் உலக சுற்றுலா தினம் அனுசரிக்கப்படுகிறது. ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 1970 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் உலக சுற்றுலாவில் ஒரு மைல்கல்லாக கருதப்படும் ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பின் சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 1980 ஆம் ஆண்டு முதல், உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 27 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும், சுற்றுலா எப்படி மக்களின் சமூகம், கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. உலக சுற்றுலா தினத்தின் நிறம் நீலம் ஆகும்.
1 Comments