இயேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களில் புனிதர்கள் சீமோன் & யூதா ஆகிய இருவரும் உண்டு.
சுமார் கி.பி. 67ம் ஆண்டு, ரோமப் பிரதேசமான “சிரியாவின்” (Syria) “லெபனான்” நாட்டு தலைநகரும், பிரதான துறைமுகமுமான “பெய்ரூட்” (Beirut) நகரில் புனிதர் சீமோனும் (St. Simon the Zealot),, இவரது நண்பரான புனிதர் “யூதா ததேயு’வும்” (St. Jude the Apostle) மறைசாட்சியாக கொல்லப்பட்டனர்.
புனிதர் சீமோன் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு மறைசாட்சியாய் மரித்தார் என்பர். இவரின் திருப்பண்டங்கள் புனித பேதுரு பேராலயத்தில் இடப்பக்கம் உள்ள புனித யோசேப்பு பீடத்தின் அடியில், புனிதர் யூதா ததேயுவின் கல்லரையோடு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
புனிதர் யூதா, கோடரியால் வெட்டப்பட்டு மரித்தார். இவரது உடல், பின்நாளில் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இவரும் ஒரே நாளில் அல்லது ஒரே இடத்தில் கிறிஸ்து இயேசுவின் திருப்பெயருக்காக இரத்த சாட்சியாக மரித்தார்கள் என்று நம்பப்படுகிறது. எனவே இணைப்பிரியா நண்பர்களான இவர்கள் இருவரின் திருநாள் ஒரே நாளில் அக்டோபர் 28 அன்று ஆசரிக்கப்படுகிறது.
0 Comments