Ad Code

புனிதர் சீமோன் | The Apostle St. Simon the Zealot

 புனிதர் சீமோன் ✠ St. Simon the

பிறப்பு: யூதேயா (Judea)

இறப்பு: கி.பி. 67
தீவிரவாதியாய் இருந்த சீமோன் அல்லது புனித சீமோன் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரை தீவிரவாதியாய் இருந்த சீமோன் என்றும் கூறுவர்.

இவரைப் பற்றி விவிலியத்தில் லூக்கா நற்செய்தி 6:15 மற்றும் அப்போஸ்தலர் பணி 1:13 இல் காணக்கிடைக்கின்றது. சீமோன் என்னும் பெயர், மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூவரும் எழுதிய “ஒத்திவைப்பு நற்செய்திகளிலும்” (Synoptic Gospels), “அப்போஸ்தலர் புத்தகத்திலும்” (Book of Acts) காணப்படுகின்றது.

இவரின் பெயரைத் தவிற விவிலியத்தில் இவரைப்பற்றி வேறு எதுவும் இல்லை. ஒரு சில போலி உரை நூல்களே (Pseudepigraphical writings) அவரைப்பற்றி இணைக்கப்பட்டிருந்தன. இறையியலாளரும், திருச்சபையின் மறைவல்லுனருமான புனிதர் ஜெரோம் கி.பி. 392-393ம் ஆண்டுகளில் எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும் (De viris illustribus) கூட இவரைப்பற்றி குறிப்பிடவில்லை. இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்களிலேயே மிகவும் குறைவான செய்தி இருப்பது இவரைப்பற்றிதான்.

சுமார் கி.பி. 67ம் ஆண்டு, ரோமப் பிரதேசமான “சிரியாவின்” (Syria) “லெபனான்” நாட்டு தலைநகரும், பிரதான துறைமுகமுமான “பெய்ரூட்” (Beirut) நகரில் இவரும், இவரது நண்பரான புனிதர் “யூதா ததேயு’வும்” (St. Jude the Apostle) மறைசாட்சியாக கொல்லப்பட்டனர். இவர் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு மறைசாட்சியாய் மரித்தார் என்பர்.

இவரின் திருப்பண்டங்கள் புனித பேதுரு பேராலயத்தில் இடப்பக்கம் உள்ள புனித யோசேப்பு பீடத்தின் அடியில், புனிதர் யூதா ததேயுவின் கல்லரையோடு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments