தலைப்பு: எஸ்றா: தேசத்தின் மீட்புக்கான ஜெபம்
வேத பகுதி: எஸ்றா 9: 5 - 15
வேதாகம நபர் குறிப்பு:
பெயர் : எஸ்ரா என்பதற்கு கர்த்தர் துணை செய்கிறார் அல்லது கர்த்தர் உதவி செய்கிறார் என்பது அர்த்தம்
தகப்பன் : செராயா- இஸ்ரவேலை சார்ந்தவர்
சிறப்பு : கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும், படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன்
விளக்கவுரை:
கர்த்தருடைய கரம் அவனோடு இருந்ததினால் பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா எஸ்ராவை இஸ்ரேல் மக்களோடு கூட அவர்களோட சொந்த தேசத்துக்கு அனுப்புகிற காரியங்கங்களை செய்ய கர்த்தர் அவர் இதயத்தை ஏவி இருந்தார். எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அழங்கரிக்க தயவு கிடைக்க செய்தார்.
அவன் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை அவனோடே கூடவரும்படி சேர்த்துக் கொண்டான்.
பெர்சியாவிலுருந்து வந்து அகவா நதியாண்டைல் சிறையிருப்பிலுருந்து கூட்டிக்கொண்டு வந்த ஜனங்களை அங்கேயே உபவாசம் செய்ய கூறினான்.
இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், புற ஜாதிகர்களின் அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.
அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள்; இப்படியே பரிசுத்த வித்து தேசங்களின் ஜனங்களோடே கலந்துபோயிற்று
அதையறிந்த எஸ்ரா , அந்திப்பலி நேரத்திலே துக்கத்தோடே எழுந்து, கிழித்துக்கொண்ட வஸ்திரத்தோடும் சால்வையோடும் முழங்காற்படியிட்டு, அவன் கைகளை தேவனாகிய கர்த்தருக்கு நேராக விரித்து ஜனங்களுக்காக ஜெபித்தான்.
விண்ணப்பம் பண்ணி , அறிக்கையிட்டு அழுது தேவனுடைய ஆலயத்திற்கு முன்பாக விழுந்து கிடந்தான். இதினிமித்தம் ஜனங்கள் தாங்கள் பாவம் செய்ததை உணர்ந்து அழுது மறுஜாதியான ஸ்திரீகளை விட்டு விலக தீர்மானம் செய்தார்கள்.
கற்றுக்கொள்ளும் பாடம்
நம்முடைய ஜெபம் எப்படி இருக்கிறது என்று நாம் சற்று சிந்தித்து பார்ப்போம்.
நாம் நம் சுயநலத்திற்காக , நம்முடைய குடும்பத்திற்காக மட்டும் ஜெபம் செய்கிறோமா அல்லது எஸ்ராவைப் போல் நம் தேசத்துக்காக, தேசத்தின் மக்களுக்காக, ஆலயத்துக்காக, ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோமா என்று சிந்திப்போம். ஜெபத்தின் வல்லமையால் நம் தேசத்தை மீட்டு சுதந்தரிப்போம்.
எழுதியவர்
திரு. பிளஸ்ஸிங் நியூமேன்
Coordinated by
SMC Youth Fellowship
0 Comments