தலைப்பு: யெப்தா:பொருத்தனை ஜெபம்
வேத பகுதி:
நியாயாதிபதிகள் 11:30,31
வேதாகம நபர் குறிப்பு
கீலேயாத்தியன்.
கிலெயாத்துக்கும் பரஸ்திரீயிக்கும்
பிறந்தவன்.
பராக்கிரமசாலி.
இஸ்ரவேல் ஜனங்களை ஆறு வருஷம் நியாயம் விசாரித்தான்.
விளக்கவுரை
கீலேயாத்தியனான யாவீர் இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரிக்கிறவனாய் இருந்து வழி நடத்தி வந்தான்.அவன் மரித்த பின்பு இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை விட்டுப் போய் அந்நிய தேசத்து தேவர்களை சேவித்தார்கள்.இதனால் கர்த்தர் கோபம் கொண்டு அவர்களை பெலிஸ்தர் கையிலும்,அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப் போட்டார்.
அவர்கள் இஸ்ரவேல் புத்திரரை நெருக்கி ஒடுக்கி யுத்தம் பண்ண வந்தார்கள்.அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி உமக்கு விரோதமாக பாவஞ்செய்தோம் என்றார்கள். பின்பு இஸ்ரவேல் புத்திரர் அந்நிய தேவர்களை விட்டு கர்த்தரை நோக்கிக் இரட்சித்தருளும் என்றார்கள். கர்த்தர் மனதுருகினார்.
இஸ்ரவேல் புத்திரர் யுத்தத்திற்காக
பிறப்பினால் ஒதுக்கிய பலவானான யெப்தாவை சேனாபதியாக்கினார்கள்.
அவன் கர்த்தருக்கு பொருத்தனையாக யுத்தத்தில் அம்மோன் புத்திரரை ஒப்புக்கொடுத்தால் என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான். யுத்தத்தில்
யெப்தாவுக்கு கர்த்தர் ஜெயத்தை கொடுத்தார்.
ஆனால் வீட்டு வாசற்படியிலிருந்து அவனின் ஒரே பிள்ளையான அவன் குமாரத்தி வந்தாள்.இதனால் மிகவும் மனம் கலங்கினான்.
அவன் குமாரத்தியும் தன் தகப்பன் கர்த்தரிடம் செய்த பொருத்தனைக்கு
இணங்கி தன்னை சர்வாங்க தகனபலியாய் ஒப்புக்கொடுத்தாள்.
கற்றுக்கொள்ளும் பாடம்:
ஜெபிக்கின்றோம். பதில் பெறுகின்றோம். ஆனால், நாம் செய்த பொருத்தனையை நிறைவேற்றுகின்றோமா? உடன்படிக்கையில் நிலைத்து நிற்கின்றோமா?
எழுதியவர்
டேவிட் ஆன்றோ
Coordinated by
SMC Youth Fellowship
0 Comments