Ad Code

எசேக்கியா: நம்பிக்கையின் ஜெபம் • Hezekiah Prayer •

தவக்கால தியானம்: 19
தலைப்பு : எசேக்கியா: நம்பிக்கையின் ஜெபம்
வேதப்பகுதி : 2 இராஜா 18-20 

வேதாகம நபர் குறிப்பு 
எசேக்கியா என்பவர் ஆகாஸ் மற்றும் அபியாவின் மகன். 25 வயதில் யூதாவுக்கு ராஜாவாகி 29 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

விளக்கவுரை 
அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. 2 இராஜாக்கள் 18:5

இவ்வசனத்தின் மூலம் எசேக்கியாவை போல் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தது யாரும் இல்லை என்று பார்க்கிறோம். மேலும் நாம் தொடர்ந்து இந்த அதிகாரத்தில் வாசிக்கும்போது கர்த்தர் மேல் உள்ள அவருடைய நம்பிக்கை கிரியையாக வெளிப்படுவதை நாம் பார்க்கிறோம். அசீரியா ராஜாவின் படையிலுள்ள ரப்சாக்கே என்பவன் எசேக்கியாவை இழிவுபடுத்தி கர்த்தர் மேல் உள்ள அவனுடைய நம்பிக்கையை குறித்து தவறாக பேசினான். 

அப்போது எசேக்கியா ராஜா இரட்டு உடுத்திக்கொண்டு, தன்னுடைய ஊழியர்களை ஏசாயா தீர்க்கதரிசியினிடத்திற்கு அனுப்பினார். அப்போது ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன காரியங்கள் மூலம் கர்த்தர் மேல் இன்னும் நம்பிக்கை கொண்டு கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்கிறார். அந்த ராத்திரியில் கர்த்தர் தன்னுடைய தூதனை அனுப்பி அசீரியாவின் படையில் ஒரு லட்சத்து எண்பத்துஐயாயிரம் பேரை சங்கரித்தார். அதிகாலையில் எழுந்திருக்கும்போது அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய் கிடந்தார்கள். கர்த்தரை நிந்தித்த ரப்சாக்கே என்பவன் நினிவேக்கு ஓடிப்போய் அங்கே கொலை செய்யப்பட்டான்.

இப்படியாக எசேக்கியா ராஜா கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையின் நிமித்தம் கர்த்தர் அவனையும் அவனுடைய தேசம் முழுவதையும் ரட்சித்தார். அந்த நாட்களில் அசீரியாவின் படை மிகவும் பலமுள்ள படையாக இருந்தது. ஆனால் கர்த்தர் ஒரே தூதனை வைத்து ஒரே ராத்திரியில் அவர்களை கலங்கப்பண்ணின்னார். காரணம் எசேக்கியா கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கை.

கற்றுக்கொள்ளும் பாடம்
நாம் நம்முடைய வாழ்க்கையில் ஏதன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று சிந்தித்து பாப்போம். சாதாரண நேரங்களில் நம் நம்பிக்கை கர்த்தர் மீது தான் இருக்கும் ஆனால் எதாவது பிரச்சனை வரும்போது கர்த்தர் மேல் உள்ள நம் நம்பிக்கை குறைவற்று உலகத்தில் மேலோ அல்லது வேறு மனிதர்கள் மேலோ மாறிவிடுகிறது. நாம் கர்த்தர் மேல் முழு நம்பிக்கையோடு இருக்கும்போது நம்முடைய பிரச்சனைகளை மாற்ற அவர் வல்லமை உள்ளவராய் இருக்கிறார். ஆமென்.

எழுதியவர்
டேனிஷ்
Coordinated by 
SMC Youth Fellowship 

Post a Comment

0 Comments