தலைப்பு: கிதியோன்: விசுவாச பரீட்சைக்கான ஜெபம்
வேத பகுதி: நியாயாதிபதிகள் 6.13-39
விளக்கவுரை
கானான் தேசத்தில் இஸ்ரவேல் மக்கள் குடியேறின பின்பு, தேவனை விட்டு வழி விலகினார்கள். ஆகவே சிலர் கையில் கையில் கடவுள் ஒப்புக்கொடுத்தார். அவ்விதமாக, மீதியானியரும் அமலேக்கியரும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்துப் போட்டதால் இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள். அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டனர்.
கிதியோன் தன்னுடைய கோதுமையை ரகசியமான இடத்தில், ஒரு மரத்தின்கீழ் அலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் அவருக்குத் தரிசனமாடு பாராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து கிதியோன் விக்கிரகங்களை அகற்ற செயல்பட்டார். மேலும் கிதியோன் மூலம் மீதியானியர் கையிலிருந்து இஸ்ரவேலை மீட்க தேவன் விரும்பி, அழைப்புக் கொடுத்தார்.
ஆனால் அவனோ பயந்தான். தேவன் தன்னோடு இருப்பதை அறிய அடையாளத்தை கேட்டான். கிதியோன் வெள்ளாட்டுக்குட்டியையும், புளிப்பில்லாத அப்பங்களையும் கர்வாலி மரத்தின் கீழ் வைத்தான். அப்பொழுது தூதன் தமது கையிலிருந்த கோலினால் தொட, அக்கினி அவைகளை பட்சித்தது. அப்பொழுது கிதியோன் நான் கர்த்தரின் தூதனை முகமுகமாய்க் கண்டேன் என்றான். அதற்கு கர்த்தர் "உனக்குச் சமாதானம் பயப்படாதே, நீ சாவதில்லை" என்றார்.
கிதியோன், கடவுளின் தயவின் முந்தைய அடையாளத்தைப் பொருட்படுத்தாமல், இஸ்ரவேலைக் காப்பாற்றுவதற்கான தனது பணிக்கான அடையாளத்தைக் கேட்டு கடவுளைச் சோதிக்கிறார், ஒரு தோலைக் களத்தில் வைத்து, நிலம் வறண்டு இருக்கும்போது அதை ஈரமாக வைத்திருக்குமாறு அல்லது அதற்கு நேர்மாறாக ஈரமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார். கடவுள் இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றுகிறார்.
கற்றுக் கொள்ளும் பாடம்
தேவன் நம்முடைய ஒவ்வொடு செயல்களிலும் நம்முடன் இருக்கிறார். விசுவாச பரீட்சை ஜெபம் என்பது கடவுளை சோதித்துப் பார்க்க அல்ல, நம் விசுவாசத்தை பெலப்படுத்த என்ற நோக்கில் இருக்க வேண்டும். ஆகவே, ஜெபித்து செயல்களைத் தொடங்க வேண்டும்.
எழுதியவர்
பெவின் ராஜா.
Coordinated by
SMC Youth Fellowship
0 Comments