Ad Code

ஆசா: இறை உதவிக்கான ஜெபம் • Asa • Prayer for Divine Help

தவக்கால தியானம்: 15
தலைப்பு: ஆசா: இறை உதவிக்கான ஜெபம் 
வேத பகுதி:2 நாளாகமம் 14 : 11

வேதாகம நபர் குறிப்பு:

தகப்பன் : அபியா ராஜா
பொறுப்பு: யூத தேசத்து ராஜா எருசலேமில் ராஜாவானான். 41 வருடம் அவன் எருசலேமை அரசான்டான்

விளக்கவுரை:
ஆசா கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடந்த ராஜா. தேசம் அதனால் அமைதியாக இருந்தது. அவன் செய்த காரியங்கள்: 
   அந்நிய தேவர்களின் அனைத்து காரியங்களையும் வெளியேற்றினார்.
   நியாயப்பிரமாணத்தை கடைப்பிடித்தார்.
   தேவாலயத்தை பராமரித்து வந்தார்.

ஆசாவின் காலத்தில், யூத தேசத்தை எத்தியோப்பிய படைகள் எதிர்த்து வந்த போது ஆசா ஜெபித்தார். அப்பொழுது, ஆசா தன் கடவுளாம் ஆண்டவரை நோக்கி, "ஆண்டவரே! வலியோனை எதிர்க்கும் வலிமையற்றவனைக் காப்பவர் உம்மையன்றி எவருமிலர்! எங்கள் கடவுளாம் ஆண்டவரே! உம்மில் நம்பிக்கை வைத்து, உமது பெயரால் இப்படையை எதிர்க்க வந்துள்ள எங்களுக்குத் துணையாக வாரும்! ஆண்டவரே, நீரே எங்கள் கடவுள்! எம்மனிதனும் உம்மை மேற்கொள்ள விடாதீர்" என்று மன்றாடினார். 

ஆண்டவர் ஆசாவின் ஜெபத்தை கேட்டு முழுமையான வெற்றிக் கொடுத்தார். கடவுள் எத்தியோப்பியரை ஆசா, யூதா முன்பாக முறியடிக்கவே, அவர்கள் தப்பியோடினர். அப்பொழுது ஆசாவும் அவனோடிருந்த மக்களும் அவர்களைக் கேரார் வரை துரத்திச் சென்றனர். ஆண்டவருக்கும் அவர் மக்களுக்கும் முன்பாக எத்தியோப்பியர் வீழ்ச்சியுற்றனர்; அவர்களுள் எவனும் உயிர் தப்பவில்லை, அவர்கள் முற்றிலும் நசுக்கப்பட்டனர். யூதாவின் வீரர்களோ மிகுதியான பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது தான் கடவுள் தம் பிள்ளைகளுக்கு செய்யும் உதவி.

கற்றுக்கொள்ளும் பாடம்
ஆசா ராஜாவாக இருந்த போதும், தன்னிடம் படைகள் இருந்த போதும், அவர் இறை உதவிக்கான ஜெபித்தார். தன் மீதும், தன் படைகள் மீதும், தன் நட்பு நாடுகள் மீதும் நம்பிக்கை வைக்காமல், கடவுள் மீது வைத்தார். யோவான் 14:14 சொல்லுகிறது: "என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்."

எழுதியவர்
T. ஹரிஸ் 
Coordinated by 
SMC Youth Fellowship 

Post a Comment

0 Comments