Ad Code

யோசியா: தாழ்மையின் ஜெபம் • Josiah Prayer • Humble Request

தவக்கால தியானம்: 14
தலைப்பு: யோசியா: தாழ்மையின் ஜெபம்
வேத பகுதி:2 நாளாகமம் 34

வேதாகம நபர் குறிப்பு
யோசியா ராஜா , தனது எட்டாம் வயதினிலே எருசலேமேலே அரசாண்ட யூத ராஜா.

யோசியா தனது எட்டாம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் , தனது தகப்பனாகிய தாவீதின் தேவனை தேட ஆரம்பித்தான்.

பன்னிரண்டாம் ஆண்டு காலத்தில் , அநேக பட்டணங்களில் உள்ள சுரூபங்களியும் , விக்கரங்களையும் அகற்றி எரித்து சாம்பலாக்க தொடங்கினான். 

தனது பதினெட்டாம் ஆண்டு ஆட்சிக்காலத்திலே , தன் தகப்பனாகிய தாவீதின் தேவனுக்காக கட்டப்பட்டிருந்த ஆலயத்தை சுத்தம் செய்வதட்காக , ஆட்கள் அமைத்து ஆலயத்தை சுத்திகரித்தான். 


விளக்கவுரை :
ஆலய சுத்திகரிப்பின் போது, அவனுடைய ஆசாரியனாகிய இலக்கியா , மோசையின் நியாயப்பிரமாணம் புத்தகம் ஆலயத்தில் இருந்து எடுத்து ராஜவினிடம் தயக்கத்தோடு கொடுத்தான். அப்போது ராஜா நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை கேட்டபோது அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு , கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய் எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள் என்று சொல்லினான்.

விசாரித்த அவன் தேவன் முன்பு தன்னைத் தாழ்த்தினார். தாழ்த்தின அவரிடம் செயலிலும் மாற்றம் இருந்து. 

 ராஜாவினிடம் மூன்று முக்கிய காரியங்கள் இருந்தது 
யோசியா ராஜாவின் வளர்ச்சி- Progression 
யோசியா ராஜாவின் செயல் - Action 
யோசியா ராஜாவின் தாழ்மையின் ஜெபம் - Humble prayer 

ஆம், bயோசியா ராஜா தனது நாட்டுமக்கள் வழிவிலகி, சொரூபங்களை வணங்குகிறவர்களாக அதன் பின் செல்கின்றவர்களாகவும் இருப்பதாய் , ஆண்டவரின் நியாயப்பிரமணத்துக்கு எதிராக இருப்பதையும் அறிந்து மனம்கசந்து , தன்னுடைய உயர்வியிலும் , தன்னை தாழ்த்தி ஆண்டவரிடம் விண்ணப்பம் வைத்து ஜெபித்தான். 
 
கற்றுக் கொள்ளும் பாடம்:
நாமும் யோசியா ராஜாவை போல் , நமது நாட்டுமக்கள் வழிவிலகி போகின்றதை பார்த்து பாரத்துடன் ஆண்டவர் ஆண்டை சேர்ந்து நம்மை தாழ்த்தி ஜெபிப்போம் , ஆண்டவர் நமது ஜெபத்தை கேட்டு கிரியை செய்ய வல்லவராய் இருக்கிறார் ஆமென். 

எழுதியவர்
சா. அகஸ்டின் தாமஸ்
Coordinated by 
SMC Youth Fellowship 

Post a Comment

0 Comments