Ad Code

எலியா: கருத்தான ஜெபம் • Elijah Prayer

தவக்கால தியானம்: 13
தலைப்பு: எலியா: கருத்தான ஜெபம்
வேத பகுதி:
 1 இராஜா : 18:30-46
 
வேதாகம நபர் குறிப்பு:
எலியா முதன்மையாக இஸ்ரேலின் அரசன் அகாப் மற்றும் அவரது மனைவி யேசபேல் ஆகியோரின் ஆட்சி காலத்தில் வாழ்ந்துள்ளார். எலியா, தேவன் மீது முழு விசுவாசம் கொண்டிருந்தார் மற்றும் தேவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக கடுமையாக போராடியவர்.

விளக்கவுரை:
தேசத்தில் பஞ்சம் உண்டானது, உடனே எலியாவுக்கும் பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கும் இடையே ஒரு போட்டி ஏற்ப்பட்டது. யாருடைய தேவன் உண்மையான தேவன் என்று.
முதலில் பாகாலின் தீர்க்கதரிசிகள் ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம்பண்ணி, நெருப்பு போடாமல் தங்கள் தேவனுடைய நாமத்தை சொல்லிக் கூப்பிடார்கள். ஆனால் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. 

எலியா உடைந்த பலீபிடத்தை சரி செய்தான். பலிபீடத்தை சுற்றி வாய்காலை உண்டாக்கி விறகுகளை அடுக்கி ஒரு காளையை துண்டித்து வைத்தார். நான்கு குடம் தண்ணீர் கொண்டு வர சொல்லி வாய்க்காலை நிரப்பினார். பலிபீடத்தை சுற்றிலும் தண்ணீர் ஓடினது. பலி செலுத்தும் நேரத்திலே, எலியா ஜெபம் செய்தான். அவர் கர்த்தரை நோக்கி இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும் நான் இந்த காரியத்தை எல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும் என்றும் கேட்டார். அப்பொழுது கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கியது. அது பலியையும், விறகுகளையும், கற்களையும், மண்னையும் பட்சித்தது. அதை பார்த்த ஜனங்கள் எல்லாரும் முகங்குப்புற விழந்து கர்த்தரே தெய்வம் என்றார்கள்.

எலியா கர்மேல் பர்வதத்தின் மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்தான். எலியா தன் ஊழியக்ரைனை பார்த்து நீ போய் சமுத்திரமுகமாய் பார் என்றான், அவன் பார்த்து ஒன்றும் இல்லை என்றான், நீ இன்னும் ஏழுதரம் பார் என்றான். ஏழாந்தரம் சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை போன்ற சிறிய மேகம் எழும்பியது. அது பெருமழையாக மாறியது.

கற்றுக்கொள்ளும் பாடம்:
ஜனங்கள் கர்த்தரை மறந்து பாகாளை பின்பற்றின அந்த காலத்தில் கர்த்தருடைய கை எலியாவின் மேல் இருந்தது. ஜனங்கள் மனம் திரும்ப வேண்டும் என்று எலியா கருத்தாக ஜெபம் செய்தார். தன்னை போல தன் மக்களும் கர்த்தரை நம்ப வேண்டும் என்ற வாஞ்சை எலியாவுக்கு இருந்தது. 

எழுதியவர்
அ. ஆல்வின் ஐசக் 
Coordinated by 
SMC Youth Fellowship 

Post a Comment

0 Comments