இரட்டிப்பான வரத்தை இறைவாக்கினர் எலியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட எலிசா, எலியாவைக் காட்டிலும் அதிகமாக ஊழியம் செய்ததாக நம்பப்படுகிறது. எலிசா என்ற பெயருக்கு கடவுள் என் மீட்பு என்று அர்த்தம்.
எலிசா ஒருவேளை ஆறு வருடம் எலியாவின் உதவியாளராக சேவை செய்திருந்தபோதிலும், அவரை விட்டுப் பிரிந்து போக எலிசா சம்மதிக்கவே இல்லை. உண்மையான பற்றுதலுக்கும் நட்புக்கும் எப்பேர்ப்பட்ட முன்மாதிரி!
அவ்விதமாக, வேதத்தில் பதிவு செய்யப்பட்ட எலியாவின் 8 அற்புதங்களின் இரு மடங்காக, எலிசாவின் 16 அற்புதங்கள் வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1. யோர்தான் ஆறு பிரிந்தது
2 இராஜாக்கள் 2.14
2. துரவில் விஷ தண்ணீரை மாற்றியது
2 இராஜாக்கள் 2.21
3. கரடி சிறுவர்களை கொன்றது
2 இராஜாக்கள் 2.24
4. வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
2 இராஜாக்கள் 3.20
5. விதவையின் பாத்திரத்தில் எண்ணெய் பெறுவது
2 இராஜாக்கள் 4.1-16
6. சூனேமியாளுக்கு குழந்தை பிறந்தது
2 இராஜாக்கள் 4.16-17
7. சூனேமியாளின் மகன் உயிற்பெற்றது
2 இராஜாக்கள் 4.35
8. உணவு பாத்திரத்தில் விஷத்தை மாற்றியது
2 இராஜாக்கள் 4.41
9. அப்பம் அதிகமானது
2 இராஜாக்கள் 4.43
10. நாகமானின் குஷ்டம் மாறியது
2 இராஜாக்கள் 5.10
11. கேயாசி குஷ்டரோகியானது
2 இராஜாக்கள் 5.18
12. இரும்பு கோடாரி மிதந்தது
2 இராஜாக்கள் 6.7
13. எலிசாவின் பணியாளர் கண் திறக்கப்பட்டது
2 இராஜாக்கள் 6.17
14. சீரிய படைகளிலிருந்து எலிசா தன்னை காத்தது (படைகளின் கண் மயக்கம் & தெளிவு)
2 இராஜாக்கள் 6.18 - 20
15. விலைவாசி குறைவு
2 இராஜாக்கள்
16. மரித்தவன் உயிரோடு எழும்பியது
2 இராஜாக்கள் 13.20 - 21
எலிசாவின் எலும்புகள் வணங்கப்பட்டதாக பைபிள் சொல்வதே இல்லை. எலிசா உயிரோடிருக்கையில் செய்த எல்லா அற்புதங்களையும் போலவே, 16வது அற்புதமும் கடவுளுடைய வல்லமையால்தான் நிகழ்ந்தது.
0 Comments