கிறிஸ்தவர்களை துன்புறுத்திய யூதரான சவுல் என்ற நபரின் கிறிஸ்தவ திருமுழுக்குப் பெயர் பவுல் என்று சிலர் கூறுவது தவறானதாகும். ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், கிறிஸ்தவத்தில் ஞானஸ்நான பெயர் மாற்றம் என்ற கோட்பாடு கிடையாது.
சவுலின் பெயர் தான் பவுல். அந்த நாட்களில் இரட்டை பெயர்களின் (Dual Names) வழக்கம் பொதுவானது. அப்போஸ்தலர் 13: 9 இல் தூய லூக்கா, அப்போஸ்தலனை "பவுல் என்று அழைக்கப்பட்ட சவுல்" என்று எழுதியிருக்கிறார். அந்த வசனத்திலிருந்து, சவுல் எப்போதும் வேதத்தில் "பவுல்" என்று குறிப்பிடப்படுகிறார்.
சவுல் என்ற பெயரானது எபிரேய மொழியை அடிப்படையாகக் கொண்டது. அதன் அர்த்தம் "கேட்டல்" என்பதாகும். Saul is a masculine given name of Hebrew origin שָׁאוּל (Shaul) which means "asked for, prayed for, inquired of God and question."
கிரேக்க மற்றும் ரோம மொழியில் பவுல் என்று வழங்கப்படுகிறது. அதன் அர்த்தம் சிறிய அல்லது எளிமை என்பதாகும். The name Paul is derived from Paulus or Paullus, from the Latin adjective meaning "small" or "humble".
பவுல் தமது இறைப்பணி காலம் முழுதும் பவுல் என்ற பெயரையே பயன்படுத்தினார் என்பதை வேதத்தில் நாம் காண முடியும்.
2 Comments