அறிவியல் குறித்ததான பல நூல்கள் தினந்தோறும் வெளிவந்துக் கொண்டேயிருக்கின்றன. ஆனால் அறிவியல் குறித்த உண்மைகள் பல தூய வேதத்தில் உள்ளன. ஏன் அறிவியலாளர்களால் முதலில் மறுக்கப்படும், பின்னர் ஏற்கப்பட்டுமுள்ள கருத்துக்கள் உள்ளன. நிலவியல், புவியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் வானியல் போன்ற பல அறிவியல் சார்ந்த குறிப்புகள் வேதாகமத்தில் உண்டு.
💫முதன்முதலாக எழுதப்பட்ட வேதாகம நூலாக கருதப்படுகின்ற யோபுவின் சரித்திர நூலில், பல விண்மீன்களின் (நட்சத்திரங்கள்) பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. (யோபு)
🌎பூமி தட்டையானது என்று எண்ணிய காலத்திலேயே பூமி உருண்டையானது என்ற உண்மையை வேதாகமம் எடுத்துரைத்தது. (ஏசாயா 40.22)
🌊பூமி ஒரே நிலப்பகுதியாகவும் கடல் தனியாகவும் இருந்து பின்னர் பகுக்கப்பட்டது என்று பரிசுத்த வேதம் கூறுவதை மறுத்த அறிவியல், இன்றைக்கு அதை ஏற்றுக் கொள்கிறது. (ஆதுயாகமம் 10.25)
💓உயிர் இதயத்தில் இருக்கிறது என்று கிபி 1962 வரை கூறிக் கொண்டிருந்த அறிவியல் வல்லுனர்கள், உயிர் ரத்தத்தில் இருக்கிறது என்று வேதத்தில் சொல்லும் அறிவியல் உண்மையை தற்போது ஒப்புக் கொண்டுள்ளனர். (ஆதியாகமம் 9.4)
🗓️ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாளைப் போன்று இருக்க முடியும் என்று கிபி 1905இல் ஐன்ஸ்டீன் கூறப்பட்ட கருத்தை தற்போது தான் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் ஆனால் இந்த உண்மையானது 3000 ஆண்டுகளுக்கு முன்பே மோசேயால் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. (சங்கீதம் 90.04)
வேதத்தில் காணப்படும் அனைத்து அறிவியல் கருத்துக்களும் உண்மையென்று அறிவியல் வல்லுனர்களும் ஒப்புக் கொள்ளும் காலம் சீக்கிரத்தில் வரப்போகிறது. மேலும் கடவுள் ஒருவர் உண்டு என்றும் இயேசுவே இரட்சகர் என்றும் விரைவில் இவர்கள் அறிக்கையிட போகிறார்கள்.
அறிவியலாளர்களின் கருத்துகள் மாறலாம்..
ஆனால்
வேதம் கூறும் அறிவியல் உண்மைகள் மாறாது...
1 Comments
Nice
ReplyDelete