முகவுரை வசனம்
(சங்கீதம் 22.30) ஒரு சந்ததி ஆண்டவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
(சங்கீதம் 77:5) பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.
(சங்கீதம் 102:27,28) நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
(சங்கீதம் 100.5) கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
ஆரம்ப ஜெபம்
ஆரம்ப பாடல்
ஜெபம் பண்ணக்கடவோம்:
தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே. ஆமென்.
பழையதை விட்டுவிட அழைப்பு
(சொந்த வா்த்தைகளில் பாவ மன்னிப்பிற்கு அழைப்பு கொடுத்து, பாவ மன்னிப்பிற்கான ஜெபம் செய்யலாம்)
பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள், ஐயா; - தயை
புரிந்து மீள், ஐயா.
இரங்கும் இரங்கும், கருணைவாரி,
ஏசு ராசனே, -பவ - நாசநேசனே!
பழைய ஏற்பாட்டு வேதபாடம்
நன்றியின் அருளுரை
ஸ்தோத்திர ஜெப வேளை
(இந்த ஸ்தோத்திர ஜெப வேளையையும், பின்வரும் புதுவருட இறைவேண்டலையும் சேர்த்து ஏறெடுக்கலாம். இடையில் நள்ளிரவு 12 மணிக்கு மணி அடிக்கப்படும்.)
புதுவருட இறைவேண்டல்
புதுவருட வாழ்த்து
புதுவருட பாடல்
பிழை உணர அழைப்பு
(2 கொரிந்தியர் 5:17) ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
(எபிரேயர் 10:19-22) ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், கடவுளுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
ஜெபம் பண்ணக்கடவோம்
பாவ அறிக்கை ஜெபம்
சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுள்ள...
பாவ விமோசனம்
சகலத்தையும் புதிதாக்குகிற கடவுள்,
அவருடைய கட்டளைகளின்படி நடந்து, அவருடைய நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய உங்களுக்கு ஏக இருதயத்தை தந்து, உங்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான் இருதயத்தை உங்களுக்கு அருளிச் செய்து, உங்களை நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்தி பெலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக.
(எசேக்கியேல் 11.19)
கர்த்தருடைய ஜெபம்
மறுமொழி
முறைமை சங்கீதம்
நிருப வாக்கியம்
பண்டிகை கீதம் (மூன்று வாலிபர் கீதம்)
நற்செய்தி வாக்கியம்
தூயர் அதநாசியஸ் விசுவாச பிரமாணம்
மறுமொழி
கர்த்தருடைய ஜெபம்
வருடப்பிறப்பு சுருக்க ஜெபம்
சிறப்பு ஜெபங்கள்
சபை அறிவிப்பு
பிரசங்க ஆயத்த பாடல்
பிரசங்கம்
காணிக்கை பாடல்
காணிக்கை ஜெபம்
உடன்படிக்கை வழிபாடு
(ஆராதனை நடத்துகின்றவர் சொந்த வார்த்தைகளில் உடன்படிக்கைக்கு அழைப்பு கொடுத்து, சபையார் அமைதியாக தீர்மானம் எடுக்க செய்யலாம். பின்பு எழுந்து நின்று இயேசு கற்பித்தார் என்ற தீபப்பாடலாக மெழுகுவர்த்தி ஏற்றி பாடலாம்).
முடிவு ஜெபம்
ஆசீர்வாதம்
ஆண்டவருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கண்கள் தேசத்தின்மேல் வைக்கப்பட்டிருக்கும். தந்தை மகன் தூய ஆவியானவராகிய சர்வ வல்லமை பொருந்திய திரியேகக்கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்குள்ளே இருந்து, எப்பொழுதும் உங்களோடே நிலைத்திருக்கக்கடவது. ஆமென்.
முடிவு கவி
மறுமொழி
கர்த்தர் உங்களோடிருப்பாராக.
அவர் உமதாவியோடும் உங்களோடிருப்பாராக.
இறையமைதயோடே சென்று வாருங்கள்
கர்த்தருடைய நாமத்தினாலே ஆமென்.
0 Comments