இந்திய சுற்றுலா தினம் ஜனவரி 25ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
1958 ஆம் ஆண்டில், இந்தியாவை நோக்கி வரும் சுற்றுலாப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசாங்கம், சுற்றுலாத் துறை என்கிற ஒரு தனித் துறையை உருவாக்கியது.
நமது தேசிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதும், சுற்றுலாத் தலங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றதாக மாற்றுவதும், அவற்றின் அழகை அப்படியே பாதுகாத்து பராமரிப்பதுமே இத்துறையின் பிரதான நோக்கமாகும்.
இத்தினத்தில் சுற்றுலா சார்ந்த விழிப்புணர்வு, கலாச்சார பாரம்பரியம் சார்ந்த தகவல்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. சுற்றுலா என்பது பல்வேறு கலாச்சாரம், மதப் பழக்கங்கள் சார்ந்தவர்களை ஒன்று சேர்ப்பதோடு, அனைவரிடத்திலும் புரிதலை ஏற்படுத்துகிறது. சுற்றுலாத் தலங்கள் மாசு அடையாமல் பாது காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்தியா பல்வேறு வகையான கலாச்சார மற்றும் தொன்ம பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு நாடாகும். இந்தியா புவியியல் அமைப்பானது பன்முகத்தன்மை வாய்ந்தது, அதன் விளைவாக வேறுபட்ட இயற்கை சுற்றுலாத்துறையைக் காணலாம்.
சுற்றுலாத்துறை என்பது இந்தியாவின் பெரிய சேவைத் துறையாகும். இது நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியில் 6.23 சதவீதம் பங்களிக்கிறது மேலும் இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 8.78% சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்தியா ஆண்டுக்கு 5 மில்லியனுக்கும் மேலான அந்நிய சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் 562 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் கொண்டுள்ளது.
0 Comments