Ad Code

முதல் குடியரசு தினம் எப்படி கொண்டாடப்பட்டது? Celebration of the First Republic Day 1950 January 26

புது தில்லியில், ராஷ்டிரபதி பவனிலுள்ள டர்பர் ஹாலில், 1950 ஜனவரி 26ம் தேதி காலை 10:18 மணிக்கு, இந்தியா, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. 

அடுத்த 6 நிமிடங்களுக்குப் பின், நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக, டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார். 

இவ்விழாவின் போது, முதல் இந்திய கவர்னர் ஜெனரலும், நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, குடியரசு மற்றும் அரசியலமைப்பு பற்றிய அறிக்கையை வாசித்தார்.

அதைத் தொடர்ந்து, 10:30 மணிக்கு 21 குண்டுகள் முழங்க, நாடு குடியரசு அடைந்ததை, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவித்தார்; தேசியக்கொடியை பறக்கவிட்டு, முதல் குடியரசு தின உரையை இந்தியில் நிகழ்த்தினார். பின் ஆங்கிலத்திலும் பேசினார். 

பின் மதியம் 2:30 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் இருந்து திறந்த வாகனத்தில், தற்போது போன்று எவ்வித பாதுகாப்பும் இன்றி, இர்வின் மைதானத்துக்கு ஜனாதிபதி சென்றார். வழி நெடுக தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. மக்கள் 'ஜெய்' என கோஷமிட்டனர்.

இர்வின் மைதானத்தில் நடந்த அணிவகுப்பில் முப்படையினர் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் 3,000 அதிகாரிகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். வெளிநாட்டு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்ணோ அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சிகள் மாலை 3:45 மணிக்கு முடிந்தன.

முதல் 4 குடியரசு தின ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் வேறு இடங்களில், அதாவது 1950ல் இர்வின் மைதானம், 1951ல் கிங்ஸ்வாய், 1952ல் செங்கோட்டை, 1953ல் ராம்லீலா மைதானம் ஆகிய இடங்களில் நடந்தது. இதன் பின் 1955ம் ஆண்டில் இருந்து, தற்போது கொண்டாடப்படும் ராஜ்பாத்தில் அணிவகுப்பு நடக்கிறது.

இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக "இந்திய அரசு சட்டம் 1935" இன் மாற்றமாக ⚡இந்திய அரசியலமைப்புச் சட்டம்⚡ செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே (1930) காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26 மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.

Post a Comment

1 Comments

John Peter said…
👏👏👏👌👍🏻