லண்டனில் அக்கடிதம் ஜான் டக்கரின் சகோதரிகள் மூன்று பேர் எலிசெபத் டக்கர், கேத்தரின் டக்கர் மற்றும் சாராள் டக்கர் கைகளில் தவழுகிறது! இதில் சாராள் டக்கர் கை, கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான பள்ளி மாணவி.
கடிதத்தை வாசித்த சாராள் டக்கர் லண்டன் பத்திரிக்கையில் இந்தியப் பெண்கள் பற்றி கட்டுரை எழுதுகிறார். மேலும் தோழிகளுடன் இணைந்து 20 சவரன் தங்கத்தை சேகரித்து இந்தியாவுக்கு அனுப்புகிறாள் சாராள் டக்கர்.
20 சவரன் தங்கம் பள்ளியாக 1843ல் கடாட்சபுரத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் நிதிப் பற்றாக்குறையால் 1857ல் பள்ளி மூடப்படுகிறது. இந்தியா தேசம் எங்கே உள்ளது என்று கூட தெரியாது சாராளுக்கு இந்த தகவல் சென்றதும், மிகுந்த வேதனையாடைந்தாள். ஆம் நம் பெண்களின் நிலை குறித்து மீண்டும் கவலை! எதிர்பாராத விதமாக நோய்வாய்ப்பட்டு சாராள் மரணப் படுக்கையில், அவளின் இறுதி மூச்சும் மூடப்படும் நிலையில், ஆனாலும், கடல் கடந்து பாளையங்கோட்டையில் மூடப்பட்டு கிடக்கும் பள்ளியை திறந்து தொடர்ந்து நடத்திட வேண்டும் என்ற ஏக்கம் அவள் முகத்தில், அதோடு சாராளின் உயிர் பிரிகிறது!!!
அவளது சகோதரிகள் சாராளின் கல்லறையில் உறுதிமொழி எடுக்கிறார்கள். உனது கனவை உனது பெயரிலையே ஒரு கல்விக்கூடம் பாளையில் துவங்கப்பட்டு பெண்களின் கல்விப் புரட்சியை பரப்புவோம் என்று சூளுரைத்தனர்.
அவர்கள் களத்தில் இறங்கி செயலாற்றியதால், 811 சவரன் தங்கத்தை லண்டன் மக்கள் வழங்கினர். அது இந்தியாவிற்கு வந்தது.
கி.பி.1861 ஆகஸ்ட் 23ல் சாராள் டக்கர் பெயரில் புதிய பள்ளி சொந்த இடத்தில் உதயமானது. 1890ல் சாராள் டக்கர் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. சில ஆண்டுகளில், அதாவது கி.பி.1895 ல் சாராள் டக்கர் கல்லூரி துவங்கப்பட்டது. அதில் இங்கிலாந்து தேச மிசனரி சாராள் தக்கர் அம்மையாரின் பணி முக்கியமானது. ஏனெனில் இவர் இந்தியா தேசத்திற்கு நேரில் வந்ததே இல்லை.ஆனாலும் இவர் செய்ததைப் போல இங்கிருக்கும் எவரும் செயல்படவில்லை என்றே சொல்லலாம்.
தென்னிந்தியாவின் முதல் பெண்கள் கல்லூரியாக, (First Women'sCollege in South India) கி.பி.1895ல் துவங்கப்பட்டு, இன்று வரை 127 ஆண்டுகளாக 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவிகள் கல்வியறிவு பெறவதற்கு கலங்கரை விளக்கமாக இயங்கும் சாராள் டக்கர் கல்லூரி இன்னும் அனேகரின் வாழ்வில் ஒளி வீசட்டும்.
0 Comments