Ad Code

ஏமி கார்மைக்கேல் வாழ்க்கை | A Life of Amy Beatrice Carmichael | Dohnavur Missionary


   ஏமி கார்மிக்கேல் 
 (16 டிசம்பர் 1867 – 18 ஜனவரி 1951) 

1892ஆம் ஆண்டில், ஓர் மாலை நேரத்தில், சூரியன் தன் கண்களை மூடிக்கொண்டிருந்த வேளை. ஏமி கார்மிக்கேலின் கண்கள் தெளிவாக திறந்துக் கொண்டிருந்தன. காதுகள் அத்தொனியைக் கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்தன. "ஊழியத்திற்குப் புறப்பட்டுப் போ." இதுவே அந்த சத்தம். உடனே இறைவன் பாதம் தன்னை ஒப்புக் கொடுத்தார். ஜப்பான் நாட்டை நோக்கி சென்று அங்கு 15 மாதங்கள் ஊழியத்தை முடித்து, பின்பு இலங்கை சென்று பணியாற்றினார்.

அக்காலத்தில், இந்தியாவில் தேவதாசி முறைகள் பின்பற்றப்பட்டு, சமுதாயம் சீரழிந்துக் கொண்டிருந்தது. இம்மக்களை மீட்கவோ, ஆதரவுக் கொடுக்கவோ யாரும் முன்வராத வேளையில், ஏமி கார்மிக்கேல். 1895 ஆம் ஆண்டு இந்தியாவை நோக்கி, இச்சீரழிவைத் தடுக்க சீற்றத்துடன் புறப்பட்டார்.


சிறுமிகள் மற்றும் பெண்களைப் போன்று சிறுவர்களும் ஆலயங்களுக்குப் படைக்கப்பட்டு, நாடகக் கம்பெனிகளுக்கு விலைக்கு விற்கப்பட்டனர். இத்தகைய ஒழுக்கமற்ற வாழ்வை தடுக்க 1926ஆம் ஆண்டு "டோனாவூர் ஐக்கியத்தை" நிறுவி, திக்கற்றவர்கள், விதவைகள் துன்பப்படுவோர் ஒழக்கங்கெட்டவர்கள், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு புகலிடம் கொடுத்தார். அவர்களுக்குக் கிறிஸ்துவின் அன்பைச் செயல் வடிவத்தில் காட்டினார். செம்புலிங்கம் என்ற மாபெரும் கொள்ளையனும் இவரால் மனந்திரும்பினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பை "நட்சத்திரக் கூட்டம்" என்றும் அழைத்தார். இன்றும் டோனாவூர் ஐக்கியம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வாழ்வளித்து வருகின்றது.


56 வருடங்களாக இந்தியாவின் நசுக்கப்பட்டவர்களுக்காகவே சேவை செய்த இவர், 38 நூல்களை எழுதியுள்ளார். அவைகளில் பல நூல்கள் தம் வாழ்நாளில் எலும்புமுறிவினால் 20 ஆண்டுகள் தாம் படுத்தப் படுக்கையாக இருக்கும்பொழுது எழுதியவையே. 'ஏழைகள் என்னுடையவர்கள்' என்ற வாக்கின்படி வாழ்ந்த ஏமி கார்மிக்கேல் சொன்னது: அன்புக்கூராமல் கொடுக்க முடியும். ஆனால், கொடுக்காமல் அன்புகூர முடியாது.

Post a Comment

0 Comments