Ad Code

PM Nehru Met Mother Teresa | அன்னை தெரசாவை சந்தித்த நேரு |

--------------------------------------------------
ஒரு முறை நேருவிடம் ஹிந்துத்துவ அமைப்பினர் மல்லுக்கு நின்றார்கள்: அந்த தெரசா மதமாற்றம் செய்கின்றார்; அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென்று குட்டிகரணம் அடித்தார்கள்.

நேரு அமைதியாக சொன்னார், "வாருங்கள்  செல்வோம் அப்படி அவர் மதமாற்றம் செய்தால் இன்றே அனுப்பிவிடுவோம்" என சொல்லிவிட்டு கல்கத்தா விரைந்தார்.

களிப்பால் துள்ளிய அந்த குழுவினர், அங்கே அந்தம்மா ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கும், இன்றே தூரத்திவிடலாம் என வன்மத்தோடு சென்றார்கள்.

நேரு அவர்கள் உள்ளே நுழைய, அக்கும்பலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அங்கே தொழுநோயாளிகளின் புண்களுக்கு சிலர் மருந்து இட்டுகொண்டிருந்தனர், சிலர் முதியவர்களுக்கு உணவு ஊட்டினர், சிலர் அவர்களை குளிப்பாட்டி கொண்டிருந்தனர். சீழ்பிடித்த அந்த நோயாளிகளை எந்த கூச்சமுமின்றி அவர்கள் பராமரித்து கொண்டிருந்தார்கள்.

இதைக் கண்டு திகைத்து போய் நின்ற அவர்களிடம் நேரு கேட்டார், "இந்த நோயாளிகள் எந்த நாட்டுக்காரர்கள்?"

அவர்கள் சொன்னார்கள்: "நம் நாட்டுக்காரர்கள்"

நேரு மீண்டும் கேட்டார்: "அந்த பெண் யார்?"

அவர்கள் சொன்னார்கள்: "அயல்நாட்டுக்காரி"

நேரு சற்று கோபத்துடன் சொன்னார், "இந்நாட்டு நோயாளிகளை அந்நிய நாட்டு பெண் வந்து பராமரிக்கின்றார். உங்கள்  வீட்டு பெண்கள் இந்த சேவைக்கு வர தயார் என்றால் இப்பொழுதே தெரசா அம்மாவை அனுப்பிவிடுகின்றேன்" என்றார்.

ஆம் எது நம் மகிழ்ச்சி?  எது நற்செயல்? என்று சிந்தித்து செயல்படுவோம்.

Post a Comment

0 Comments