இந்திய தேசிய இளைஞர் தினமானது, ஜனவரி மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசாங்கம் 1984 ஆம் ஆண்டு இந்த நாளை அனுசரிக்கும் வண்ணம் அறிவித்தது.
ஜனவரி 12 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமாகும். இளைஞர்களின் எழுச்சி நாயகரான இவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் கல்கத்தாவில் பிறந்தார். இந்திய இளைஞர்களுக்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கமாக அவரது வாழ்க்கை அமைந்தது என்றால் மிகையாகாது.
0 Comments