தமிழ் மாதங்களில் முதல் மாதமான, தை மாதத்தின் பிறப்பை தமிழரின் அறுவடை பெரு விழாவான, தமிழர் திருநாளாக மற்றும் பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா? இங்கே கிளிக் செய்யவும்.
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
இவ்வாறு உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடை விழா, இயற்கையோடு மனிதனுக்கு உரிய தொடர்பையும், இறைவனோடும் சக மனிதனோடும் மனிதன் கொள்கின்ற உறவையும் வெளிப்படுத்துபவையாக திகழ்கிறது. எந்தவொரு விழாவும் வெறும் அடையாளத்தை மட்டும் அணிந்து கொண்டு அதன் அர்த்தத்தை இழந்து விடுமெனில் பயனற்றதாகி விடுகிறது. மனிதனோடும், இயற்கையோடும், இறைவனோடும் கொண்டுள்ள உறவை உறுதிப்படுத்தவும், சீரமைக்கவும் இந்த தமிழர் திருநாள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. தமிழர் திருநாள் ஆராதனை எப்படி நடத்தலாம்? இங்கே கிளிக் செய்யவும்.
0 Comments