தியானம் : 12 / 26.02.2022
தலைப்பு : அபேட்சையின் முடிவு எப்படி?
திருவசனம் : நீதிமொழிகள் 10.28 "நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கரின் அபேட்சை அழியும்."
முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். அபேட்சை என்ற வார்த்தைக்கு விருப்பம் அல்லது எதிர்பார்ப்பு என்று பொருள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும். அதை அடைந்தே ஆகவேண்டும் என்ற நம்பிக்கையும் இருக்கும். ஆனால் எல்லோருடைய ஆசையும் நல்ல நோக்கில் இருக்கிறது என்று சொல்ல இயலாது. சிலர் தீமையாக விருப்பப்படலாம். சிலர் நன்மையை எதிர்பார்க்கலாம். எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் தொடர்புண்டு. எதை அபேட்சிக்கிறமோ அதில் தான் நம்பிக்கை இருக்கும். இந்த வசனத்தில் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் முடிவில் கிடைக்கக்கூடிய முடிவை (End-result) குறித்து சொல்லப்பட்டுள்ளது.
விளக்கவுரை
இங்கே சாலொமோன் ஞானி சொல்லுகிறார்: "துன்மார்க்கரின் அபேட்சை அழியும்." துன்மார்க்கர் என்றால் கடவுளுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்கின்றவர்கள்; பொல்லாதவர்கள்; தவறான வழியில் நடக்கிறவர்கள். எதை முடிவில் பெறுவதற்காக நியாயமற்ற முறையில் செயல்படுகிறார்களோ அதை அடைய முடியாமல் அவர்களின் எதிர்ப்பார்ப்பு வீணாகும். அதே நேரத்தில் அவர் சொல்லுகிறார்: "நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்." நீதிமான்கள் என்பவர்கள் கடவுளுக்கு பயந்து வாழ்பவர்கள். அவர்களின் நம்பிக்கை வீணாகாது. நிச்சயமாக நடந்தேறும்.
இதற்கான காரணமென்ன? துன்மார்க்கனின் விருப்பம் அல்லது நம்பிக்கை அவனது சுய சார்ந்து, அவனால் உண்டானது. அதே நேரத்தில் அது பிறருக்கு நன்மைபயக்க கூடியதாக இருக்க வாய்ப்பில்லை.The wicked's intension is also wicked. ஆனால் நீதிமானின் நம்பிக்கையானது தன் மேல் இல்லாமல் கடவுளைச் சார்ந்து இருக்கும்; அது பிறருக்கு தீமை விளைவிக்க கூடியதாக இருக்காது. The desires of the righteous is to be righteous.
0 Comments