Ad Code

திருநெல்வேலி திருமண்டல பெண்கள் ஐக்கிய சங்கம் | CSI Tirunelveli Diocesan Women's Fellowship | History of TDWF


திருநெல்வேலி திருமண்டலத்தின் தற்போதைய பெண்கள் ஐக்கிய சங்கம் ஒரு எளிமையான தொடக்கமாக, 1848 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று கடாட்சபுரம் என்ற தொலைதூர கிராமத்தில் விதைக்கப்பட்ட சிறிய விதை இப்போது ராட்சத ஆலமரமாக வளர்ந்துள்ளது.
ஆரம்பகால திருநெல்வேலி திருச்சபையின் மிகவும் புகழ்பெற்றவரும் ஆங்கிலிக்கன் முறைப்படி நியமிக்கப்பட்ட முதல் தென்னிந்திய ஆயருமான அருட்திரு. ஜான் தேவசகாயம் அவர்கள் கடாட்சபுரம் கிராமத்தில் தான் ஊழியம்  செய்த காலத்தில் மிக சிறப்பாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி முத்தம்மாள் தேவசகாயம் திருச்சபையின் பெண்களிடையே ஒரு அமைதியான உந்துதல் சக்தியாக இருந்தார்.
 
1848 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று, சில புத்தாண்டு தீர்மானங்களைச் செய்யுமாறு சபைக்கு அறிவுறுத்தப்பட்ட பிரசங்கத்தைக் கேட்ட பிறகு, அன்றே சில தாய்மார்கள் குருமனைக்கு சென்று, ஜெபம் மற்றும் தியானத்திற்கான ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதே தங்கள் புத்தாண்டு தீர்மானம் என்று சொல்லி, போதகரின் மனைவி தங்களை அப்படி ஒரு கூட்டுறவில் வழிநடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். அதுதான் திருநெல்வேலியில் பெண்கள் ஐக்கிய சங்கத்தின் தோற்றம். 
அருட்தந்தை ஜான் தேவசகாயம் அவர்கள், இதன் உருவாக்கத்தை பற்றி  C.M.S ஸ்தாபனத்திற்கு தெரிவித்தபோது, இந்த சங்கத்தைக் குறித்து அவரைப் பாராட்டியது, 

நூற்றாண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட நீடித்த சேவையை நிறைவு செய்திருந்த, திருநெல்வேலி திருமண்டல பெண்கள் ஐக்கிய சங்கம்,  1961 செப்டம்பர்  மாதத்தில், தென்னிந்திய திருச்சபையின் பெண்கள் ஐக்கிய சங்கம் உறுப்பினராகவும் இணைந்தது.

தற்போது, திருநெல்வேலி திருமண்டல பெண்கள் ஐக்கிய சங்கம், அதன் 750 கிளைகளில் 20,000 உறுப்பினர்களைக் கொண்ட வலுவான படையாக செயல்பட்டு வருகிறது. அநேக நல திட்டங்கள் இந்த சங்கத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அனைத்து சபையின் கிளைகளாலும், பெண்கள் முன்வந்து வழிப்பாட்டை நடத்தும் வண்ணம் பெண்கள் ஞாயிறாக அனுசரிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments