Ad Code

திருமறையூர் இறையியல் கல்லூரி | Tamilnadu Theological College, Thirumaraiyur, Nazareth of Tuticorin

திருமறையாம் பரிசுத்த வேதாகமத்தை போதிக்கும் ஊா் திருமறையூா் என்றானதாம்.

கனம் மா்காஷிஸ் ஐயரவா்கள் திருமறையூாில் 1890 வருடம் ஐனவாியில் 8 மாணவருடன் உபதேசிமாா் வேதசாஸ்திர வகுப்பை ஆரமபித்தாா்.

120 வருடங்கள் பழைமையான பாரம்பாியமிக்க திருமறையூா் மறுரூப ஆலயத்தோடு இணைந்து ஆரம்பிக்கபட்டது தான் திருமறையூர் தமிழ்நாடு இறையியல் கல்லூரியாகும்.

1969 வரை இங்கு இயங்கி கொண்டிருந்த திருமறையூர் தமிழ்நாடு இறையியல் கல்லூரி அதன்பின் மதுரை அரசரடிக்கு மாற்றபட்டு அங்கு செயல்படுகிறது.

இக்கல்லூாி முன்னேற பாடுபட்டவா்களில் முதன்மையானவா் கனம் தாமஸ் சாமுவேல் காரெட் திருமறையூரிலுள்ள பைபிள் கல்லூரியை ஒரு பெரிய தமிழ்நாடு இறையியல் கல்லூரியாக மாற்ற அவர் உந்துசக்தியாக இருந்தார். 

திருமறையூர் இறையியல் கல்லூரியில் முதல்வராக பணி செய்து இம்மண்ணில் மறைந்த மிஷனரி டி.சி. விட்னி (1886-1952) அவா்களின் பணியும் மறக்கமுடியாதது.

இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்திலோ, இறையியல் கல்லூாியிலோ ஆங்கில மிஷனோிகளின் பெயா் கல்வெட்டிலோ, பெயா் பலகையிலோ இல்லை. 

ஆனால், இக்கல்லூாியில் இருந்து குருவானவா் பட்டம் படித்து பிஷ்ப்பாக, குருவானவர்களாக பல திருமண்டலங்களில் இன்றும் பலபோ் பணியாற்றி வருகிறாா்கள்.

உலகம் முழுவதும் கா்த்தருடைய ஊழியத்தையும், வசனத்தையும் கொண்டு சென்ற இக்கல்லூாி மற்றும் ஆலயம் பராமாிப்பு இல்லாமல் இருப்பது வருந்த்தக்கது.

Post a Comment

1 Comments