Ad Code

11. கனம் யாருக்கு? | Who Gets the Hounur? திருமறை தியானம் | நீதிமொழிகள் 3.35 Proverbs

தியானம் : 11 / 25.02.2022
தலைப்பு : கனம் யாருக்கு?
திருவசனம் : நீதிமொழிகள் 3.35 "ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; 1மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்"

முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். எல்லாருக்கும் முன்பாக தான் கனப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். அதுவும் தனக்கு நிகர் யாருமில்லை என்ற நிலைக்குவர பலர் பலவழிகளில் செய்ல்படுவதை நம்மால் காண முடியும். தன்னை தகுந்தவாறு கனப்படுத்தவில்லை என்று பழிவாங்குகிற ஒரு கூட்டம் இருக்கிறது. தன்னை பிறர் கனப்படுத்த வேண்டும் என்பதற்காக எதை எதையோ செய்யும் இன்னொரு கூட்டமும் இருக்கிறது. ஆனால் இந்த வசனத்தில் சாலொமோன் ஞானி சாட்டையடி போல, கனம் யாருக்கு என்று சொல்லியிருக்கிறார்.

விளக்கவுரை

"ஞானவான்கள் கனத்தை சுதந்தரிப்பார்கள்" என்று இந்த வசனம் சொல்லுகிறது. யார் இந்த ஞானவான்கள்? ஞானமுள்ளவர்கள் தான் ஞானவான்கள். இறைவன் காட்டுகிற வழியில் சரியான முறையில் செல்வது ஞானம். Wisdom is taking what God says and applying it to our lives. தீ பட்டால் சுடும் என்று தெரியும். அது அறிவு. அதை அறிந்த நாம் நெருப்பை எதற்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.. தெரிந்தே கையில் வைத்தால் சுடும். Wisdom is the daily practice of knowledge in practical ways. இவ்விதமாக, ஞானத்தோடு செயல்படுகிறவர்கள் கனத்தை (Honour) தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. அது தேடி வரும். அப்போது சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். சுதந்தரம் என்றால் உரிமையாக்கிக் கொள்ளுவார்கள்.

இதற்கு மாறாக, மதிகேடர்கள் கனவீனம் அடைவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. மதிகேடர் என்றால் தங்கள் மதியை (அறிவை) அல்லது பிறர் சொல்லிய நல்லவற்றை பயன்படுத்தாதவர்கள். Here fool is one who use his knowledge, but not one who disabled. இவர்களுக்கு இகழ்ச்சி தானாக தேடி வரும்.

நிறைவுரை
கனத்தை, நன்மதிப்பை, புகழை தேடி செல்ல வேண்டாம். நீங்கள் ஞானத்தோடு வாழ்ந்தால் அது உங்களை தேடி வரும். அந்த ஞானம் இயேசு கிறிஸ்துவில் இருக்கிறது. அவரை நம்பி  வாழ்வில் பயணிக்கும் போது, நம்முடைய அறிவுக்கெட்டாத ஆச்சரியமான முறையில் நடத்த அவர் வல்லவர். ஞானமாக வாழ்வோம். கனத்தை சுதந்தரிப்போம். இறையாசி உங்களோடிருப்பதாக.

Post a Comment

0 Comments