⚖️ உலக சமூக நீதி நாள் (World Day of Social Justice) உலக நாடுகள் முழுவதிலும் ஆண்டுதோறும் பிப்ரவரி 20 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது.
⚖️ ஐக்கிய நாடுகள் சபையானது நவம்பர் மாதம் 26ஆம் திகதி 2007 ஆம் ஆண்டு பொது சபை பொதுச்சபையின் 63ஆம் அமர்வில் பிப்ரவரி 20 ஆண்டுதோறும் உலக சமூக நீதி தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது.
⚖️ இந்த வழிகாட்டுதலின்படி, 2009 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
⚖️ வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நாளனது சிறப்பிக்கப்படுகிறது.
⚖️ உலக நாடுகளுக்கு இடையில் அமைதியான மற்றும் வளமான, சௌபாக்கியமான, சுகவாழ்வுக்கான அடிப்படைக் கொள்கை, பாலின சமத்துவம், பழங்குடி மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை பாதுகாத்தல் பாலினம், வயது, இனம், மதம், கலாச்சாரம், அல்லது இயலாமை காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் தடைகளை அகற்றுதல் போன்ற சமூக நீதிக்கான கொள்கைகளை ஆதரிப்பதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாகும்.
0 Comments