தலைப்பு : பண காதல் (The Love of Money)
திருவசனம் : 1 தீமோத்தேயு 6.17 "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது..."
முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பார்கள். பணத்திற்காக எதையும் செய்ய துணிந்துவிட்ட சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காரணம் பண காதல், திருப்தியடையாத அளவிற்கு பேராசை. இந்த பண இச்சையின் விளைவு என்னவென்று தெளிவாக பரிசுத்த பவுலடிகளார் தீமோத்தேயுவுக்கு கற்றுக்கொடுத்தார்.
1. எல்லா தீமைக்கும் வேர்
பண ஆசையானது ஒரு மனிதனை எந்த தவறையும் செய்ய வைக்கும். எளிதாக ஒருவரை விழவைக்கும். பணத்திற்காக உண்மையை பொய்யென்று சொல்வதும், அந்நியாயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதும் சமுதாய சீர்கேட்டிற்கு வழிவகுக்கிறது. பெரும்பாலான குற்றங்களுக்கு பின்னால் ஆணிவேராக பண இச்சை இருப்பது நம்பத்தக்க ஒன்றாகும்.
2. விசுவாத்திற்கான கேள்விக்குறி
பண ஆசை கடவுள் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கி விசுவாச வாழ்வில் இருந்து பின் வாங்க வைக்கும். தன் நம்பிக்கையை தன் ஆஸ்தி, வேலை, நிலம் மற்றும் பொருட்களின் மேல் வைத்து வேஷமாக மனிதர்கள் வாழ்கிறார்கள். ஒரு கட்டத்தில், ஐசுவரியத்தை சம்பாதிக்க பெலன் கொடுக்கும் கடவுளையே மறந்துவிட வழிவகுக்கும்.
3. வேதனைகளுக்கான வழி
வாழ்கையில் ஆடம்பரமாக சுகித்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்கிறவர்கள், முடிவில் அதை அனுபவிக்க முடியாமல் அநேக வேதனைகளினால் துன்புறுகிறதை காணமுடியும். தாங்களாகவே தங்களுக்கு கஷ்டங்களை வருவித்துக் கொள்கிறார்கள்.
நிறைவுரை
செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. ஆகவே, கடவுளின் மனிதர்களாகிய நாம் இவற்றிலிருந்து தப்பித்து ஓடவும், நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடவும் திருமறை (1 தீமோ 6.9-11) நமக்கு கற்றுத்தருகிறது. இறையாசி உங்களோடிருப்பதாக.
0 Comments