☔ உலக குடை தினம் பிப்ரவரி 10 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி கடைபிடிக்கப்படுகிறது. சூரியன் கதிர் வீச்சு, மழையிலிருந்து நம்மை காப்பாற்றும் குடையின் பயன்பாட்டை போற்றும் வண்ணம் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
☔ அம்பர்லா என்ற வார்த்தை லத்தீன் மொழி சொல்லான "umbra"-- லிருந்துதான் வந்தது. இந்தச் சொல்லுக்கு நிழல் (Shade or Shadow) என்று அர்த்தம்.
☔ முதன் முதலாக, எகிப்து, கிரேக்கம், சீனா போன்ற நாடுகளில் பழங்காலத்திலிருந்தே குடை இருந்ததற்கான ஆதாரம் இருக்கின்றன.
☔ ஐரோப்பாவில் ஆரம்ப காலத்தில் மரம் அல்லது திமிங்கலத்தில் எலும்பால் தயாரிக்கப்பட்டு ஆயில் கேன்வாஸால் மூடப்பட்டிருந்தது. மேலும், குடை கம்பியில் அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதற்கு ஏற்ப விலை இருந்தது.
☔ உலகின் முதல் குடை கடை ஜேம்ஸ் ஸ்மித் அண்ட் சன்ஸ் என்ற பெயரில் லண்டனில் 1830 ல் ஆரம்பிக்கப்பட்டது. இப்போதும் இந்தக் கடை 53, நியூ ஆக்ஸ்ஃபோர்ட் தெரு என்ற முகவரியில் லண்டனில் இயங்கி வருகிறது.
☔ 1852 ஆம் ஆண்டில் சாமுவேல் ஃபோக்ஸ் என்பவர் இரும்பு கம்பிகளை கொண்ட குடையை வடிவமைத்தார். மேலும், இவர் இங்கிலீஷ் ஸ்டீல்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.
☔ நாம் தற்போது உபயோகிக்கும் நவீன கால குடைகள் முதன் முதலில் 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பா முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
☔ எத்தனை நவீன கண்டுபிடிப்புகள் வந்தாலும் குடைக்கு மாற்று ஏதும் உண்டோ?
0 Comments