.....................................................................
பழிக்குப் பழியா?
சா. சாலொமோன் தேவதாசன் டேனியல் B.A, மனகாவலம்பிள்ளை நகர் சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்
BD - 4, செராம்பூர் கல்லூரி, செராம்பூர்.
BD - 4, செராம்பூர் கல்லூரி, செராம்பூர்.
.........................................................................
தியான பகுதி: மத்தேயு 5.38-42
38கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 39நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு. 40உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. 41ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. 42உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

முகவுரை
அநேகருடைய குடும்பங்களில் அமைதி இல்லை; அநேகருடைய குடும்பங்களில் சமாதானம் இல்லை பலவிதமான பிரச்சனைகள், சண்டைகள், மனக்கசப்புகள், விரோதங்கள், வன்மமான சிந்தனைகள். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நோக்கும்போது, பழிக்கு பழி வாங்குகிற ஒரு தன்மையும் முக்கியமான ஒன்றைன்பதை கண்டுகொள்ள முடியும். காணப்படக்கூடிய ஒரு குணம் பழிக்கு பழிவாங்குகிற எண்ணம். அநேக சபைகளில் மற்றும் நிறுவனங்களில் இப்படிப்பட்ட பழிவாங்க வேண்டும் என்பதற்காக பல காரியங்களை செய்கிறார்கள். ஏதோ ஒரு சின்ன காரியத்திற்காக பல ஆண்டுகள் கழித்து பழிக்கு பழி வாங்குகிற கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.

தியானம்
ஆண்டவராகிய இயேசுவானவர் மத்தேயு 5:38-40 வசனங்களில், தெளிவாக சுட்டிக்காண்பிக்கிற ஒரு காரியம் என்னவென்றால், தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் என்பதே. ஏனென்றால், அவர்காலத்து யூதர்கள், நியாயபிரமாணத்தை தவறாக புரிந்துகொண்டு, ஒருவரையொருவர் கடிந்து பட்சிக்கிறவர்களாய் வாழ்ந்து வந்தனர்.

கண்ணுக்குக் கண் மற்றும் பல்லுக்கு பல் என்றாற் போல் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டிருப்பது யாராவது தங்களைக் காயப்படுத்தினால் அதற்கு பதில்வினையாக காயப்படுத்திய நபரை அதே வழியில் காயப்படுத்துவது என்பது தனிப்பட்ட காரியத்துக்காக பழிவாங்குதலை சொல்லவில்லை. மாறாக யூத மக்களுக்கு நீதி உண்டாக (Civil Law or Constitution) சொல்லப்பட்டது. ஆனால் காலம் செல்ல செல்ல மக்கள் தங்கள் தனிப்பட்ட காரியங்களுக்காக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் இதைப் பின்பற்றினர். எனவே இயேசு இதனை மறுத்தார்
ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு என்று காண்பித்திருக்கிறார். ஆனால் இன்று அநேக கிறிஸ்தவர்கள் அதை சற்று மாற்றம் செய்து, ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தில் திருப்பிக் கொடு என்பதாக செயல்படுகிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. பழிவாங்குதல் நமக்கு அருளப்பட்டது அல்ல. அடுத்த வசனத்தில் உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒரு மனிதன் நமக்கு எதிராக ஏதாகிலும் அநியாயம் செய்யும் பொழுது நாம் தீமையோடு எதிர்த்து நிற்பதற்கு பதிலாக விட்டுக்கொடுக்க கர்த்தர் நம்மை நினைவூட்டுகிறார். நாம் பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டியதேயல்லாமல் மனிதனுக்கு எதிர்த்து நிற்க வேண்டிய அவசியமில்லை.
மத்தேயு 5:41 சொல்லுகிறது, எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். இதன் மூலம் நாம் மிகப் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை இயேசு கற்றுக்கொடுக்கிறார். நம் எதிரியாக இருந்தால் கூட அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்கள் கடன் கேட்கும் போது முகங்கோணாமல் கொடுக்க வேண்டும். சாலொமோன் ஞானி இவ்விதமாக சொல்லுகிறார் (நீதிமொழிகள் 25.21-22): உன் எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடிருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு. இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்; ஆண்டவரும் உனக்குக் கைம்மாறு அளிப்பார்.
சிந்தனைக்கு...
ஒரு நடந்த சம்பவத்தை நான் சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பதாக (1998), ஒடிசா மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கிரகாம் ஸ்டெய்ன்ஸ் என்கிற ஒரு மிஷனரி தன்னுடைய மகன்களோடு ஜீப்பில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். ஆனால் அவருடைய துணைவியார் சொன்ன ஒரு காரியம் என்று சொன்ன அவர்களை நான் மன்னிக்கிறேன் என்று சொன்னார். இப்படிப்பட்ட ஒரு கிறிஸ்தவ குணாதிசயம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

இந்த நாட்களில் அநேக கிறிஸ்தவர்கள் பிறருக்கு எதிராக நின்று பழிக்கு பழி வாங்குகிறார்கள். கடவுளுடைய அதிகாரத்தை நாம் எடுத்து பயன்படுத்த நினைக்கிறோம். பழிவாங்குதல் எனக்குரியது நானே பதில் செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று ரோமர் 12:19 இல் வாசிக்கிறோம். பழிக்கு பழி வாங்குகிற அதிகாரம் நமக்கு கொடுக்கப்படவில்லை மாறாக எதிரிகளை நேசிக்க வேண்டும் என்கிற கற்பனையையே கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிறார். எதிரிகளை நேசித்து அணைத்துக் கொள்ளக் கூடிய தன்மையுடைய வாழ்க்கையையும், சிலுவையில் அறையப்பட்ட தன்னை அறைந்தவர்களுக்கு ஜெபிக்கிற இயேசுவானவருடைய குணத்தையும் பின்பற்றி பூரணராகும்படி கடந்து போவாமாக.
1 Comments