ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
ஆவலாய் இயேசுன்னை அழைக்கின்றாரே
1.பார் திருமேனி வாரடியேற்றவர்
பார சிலுவைதனை சுமந்து சென்றனரே
பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
பயமின்றி வந்திடுவாய்.
2.மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
உண்ர்ந்திதையுடனே உன்னதரண்டை
சரண்புகுவாய் இத்தருணம்
3.கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
கிருபையும் அளித்திடுவார்.
4.பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
மறுரூப நாளின் ஆச்சாரமதுவே
மகிமையும் அடைந்திடுவாய்.
0 Comments