கல்மனம் உருக்கிடும் கல்வாரியே - என்
1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த
2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தை சிந்தின உன்னத
3..நாதன் எனக்காக ஆதரவற் றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும்
4. முள்முடி சூடியே கூர் ஆணிமீதிலே
கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும்
5.சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ
6.எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன்நாதா.
7. இவ்வித் அன்பை நான் எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேனே.
0 Comments