1. நெஞ்சமே கெத்செமனேக்கு
நீ நடந்து வந்திடாயோ
நெஞ்சலத்தால் நெஞ்சுருகி
தியங்கி நின்றார் ஆண்டவனார்.
2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி
அங்கலாய்த்து வாடுகின்றார்
தேற்றுவார் அங்கொருவரின்றி
தியங்கி நின்றார் ஆண்டவனார்.
3. தேவ கோப தீச்சூளையில்
சிந்தை நொந்து வெந்துருகி
ஆவலாய்த் தரையில் வீழ்ந்து
அழுது ஜெபம் செய்கின்றாரே.
4.அப்பா பிதாவே இப்பாத்திரம்
அகலச் செய்யும் சித்தமானால்
எப்படியும் நின் சித்தம் போல்
எனக்காகட்டும் என்கிறாரே.
5.இரத்த வேர்வையாலே தகம்
மெத்த நனைந் திருக்குதையோ
குற்றமொன்றும் செய்திடாதே
கொற்றவர்க் கிவ்வாதையேனோ?
6. இந்த ஆத்ம வாதையெல்லாம்
எந்தன் பாவத்தால் வந்ததே
சுந்தரம் சேர் இயேசுவே என்
தோஷம் பொருத் தாளுமையா.
0 Comments