திருச்சட்டத்தை நிறைவேற்றிய இயேசு
செ. சாமுவேல் சேவியர் ராஜா B.A, பங்களா சுரண்டை சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்
BD - 1, செராம்பூர் கல்லூரி, செராம்பூர்.
click here to download pdf of Meditation 13
தியான வசனம்: மத்தேயு 5:17
நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
முகவுரை
யோவான் நற்செய்தி 1: 17 சொல்லுகிறது திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; மோசேயின் யூத சட்டம் திருமறையில் முதல் ஐந்து புத்தகங்களைக் (Pentateuch) கொண்டிருந்தது. திருச்சட்டத்தினை, வழிபாட்டுக்குறிய சடங்குகள் தொடர்பானவை (Ceremonial Laws), சமுதாயத்திற்குரிய கலாச்சாரம் தொடர்பானவை (Civil Laws) மற்றும் நீதிக்கருத்துக்கள் (Moral Laws) என மூன்று வகைகளாக பிரிக்கலாம். தீர்க்கதரிசனங்கள் (Prophecies) என்பது, நாம் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட இறைவாக்குகளை உள்ளடக்கியது, உதாரணமாக ஏசாயா, எரேமியா மற்றும் பிற தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் இஸ்ரேலுக்கு இறை செய்திகளை வழங்குவதற்காக அனுப்பப்பட்டது. யூத வேதாகமத்திலுள்ள அனைத்தும் கிறிஸ்தவ திருமறையில், ஆதியாகமம் முதல் மல்கியா வரை 39 புத்தகங்களை நாம் பழைய ஏற்பாடு என்று அழைக்கிறோம். பழைய ஏற்பாடு, மேசியாவாகிய இயேசுவின் வருகையை முன்னோக்கிச் சுட்டிக்காட்டுகிறது.
இயேசுவின் மீது வைக்கப்பட்ட குற்றஞ்சாட்டு
இயேசு தனது போதனைகள் மற்றும் அற்புதங்கள் புகழ் பெற்றதால், சில விமர்சகர்கள் மோசேயின் சட்டத்தை புறக்கணிக்க மக்களுக்கு கற்பிப்பதாகக் கூறினர் (மத்தேயு 12:2). கடவுள் இஸ்ரவேலருகுக் கொடுத்ததிலிருந்து ஒரு புதிய அல்லது மாறுபட்ட பிரமாண சட்டத்தை அவர் கற்பிக்கிறார் என்று மதத் தலைவர்கள் பொய்யாகக் கூறத் தொடங்கினர் (மத்தேயு 12:2). இறுதியில் யூத மதத் தலைவர்கள் அவர் மீது வைத்த குற்றசாட்டும் இதைக் குறித்துதான். இயேசு தன்னை குமாரன் என்று சொல்லி, பிதாவை நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார், (மத்தேயு 26:63-65; யோவான் 8:58-59).
இயேசு அழித்தாரா? நிறைவேற்றினாரா?
‘மோசேயின் சட்டம் (Mosaic Law) அழிக்கப்பட வேண்டும் என்று இயேசு மக்களை அழைக்கிறா’ர் என்ற பொய்யை இயேசு எதிர்த்தார். சட்டத்தையோ தீர்க்கதரிசிகளையோ நிராகரிக்கக் கூடாது என்பதே அவருடைய அவர் சொல்லி, வாழ்ந்தார். நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் "நிறைவேற்ற" தான் வந்ததாக இயேசு போதித்தார். அதே நேரத்தில், நியாயப்பிரமாணத்தினால் உண்டான பயத்தை நீக்கும்படியாக இயேசு கிறிஸ்து பூரண அன்பின் வெளிப்பாடாய் நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாய் வந்தார் (ரோமர் 13:8-10) என்று திருமறை சொல்லுகிறது.
எபிரெயருக்கு எழுதின நிருபம், கடவுள் எப்போதுமே பழைய உடன்படிக்கையை ஒரு புதிய உடன்படிக்கைக்கு இட்டுச் செல்ல உத்தேசித்திருந்தார் என்பதை விளக்குகிறது (எபிரெயர் 8:6-8). அந்த மாற்றம் கடவுள் மோசேயின் வாயிலாக சொன்னதை ஒழிப்பதற்காக அல்ல, ஆனால் அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக. மோசேயின் வாயிலாக நியாயப்பிரமாணத்தைக் கொடுத்து, தீர்க்கதரிசிகளுக்குத் தீர்க்கதரிசனங்களைச் சொன்ன கடவுளின் குமாரனாக தான் வந்ததாக போதித்தார்.
திருச்சட்டத்தில் கடவுள் இஸ்ரேலுக்கு வழங்கிய பலி முறை விலங்குகளை கொல்வது, இரத்த தியாகம், மனித பாவத்திற்கு செலுத்த வேண்டியிருந்தது. அவை தற்காலிகமாக மட்டுமே பயனுள்ளதாக இருந்தன, ஒவ்வொரு முறையும் பாவ நிவிர்த்திக்காக, அதிக இரத்தம் சிந்தப்பட வேண்டியிருந்தது (எபிரெயர் 10:1-4). இருப்பினும், இயேசு, பாவத்திற்கான பரிபூரணமான, பாவமற்ற மனித பலியாக, அந்த இரத்த பலியின் தேவையை ஒருமுறை மற்றும் அனைவருக்கும் நிறைவேற்றினார் (எபிரெயர் 10:11-14). இயேசு வரும்வரை எந்த இஸ்ரவேலனும் நிறைவேற்ற முடியாத பரிபூரணமான, பாவமில்லாத நீதியின் வாழ்க்கையைச் சட்டம் விளக்கிக் கூறியது. இதை நிறைவேற்றிய முதல் மற்றும் கடைசி நபர்.
மேசியாவைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனத்தை இயேசுவின் வாழ்க்கை எவ்வாறு நிறைவேற்றியது என்பதை, சிறப்பாக மத்தேயு நற்செய்தியாளர் தனது புத்தகம் முழுவதும் விளக்குகிறார். இந்த தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை இயேசு நிராகரிக்கவில்லை; தம் வாழ்வின் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் அவற்றை நிறைவேற்றினார்.
நிறைவுரை
இயேசுவுக்கும் மோசேக்கும் இடையே சொல்லப்பட்ட எந்த இடைவெளியையும் நிராகரித்த மற்றொரு முக்கியமான இறையிலாளர், புனித அகஸ்டின், இயேசு திருச்சட்டத்தை நிறைவேற்றிய ஆறு வெவ்வேறு வழிகளை கோடிட்டுக் காட்டியுள்ளார்: 1. இயேசு தனிப்பட்ட முறையில் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தார். 2.அவர் மேசியாவைக் குறித்து சொல்லப்பட்ட இறைவாக்குகளை நிறைவேற்றினார். 3. அதற்குக் கீழ்ப்படியத் தன் மக்களுக்கு அதிகாரம் அளித்தார். 4. திருச்சட்டத்திற்கான உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தினார். 5. சடங்குகள் மற்றும் சடங்குகளின் உண்மையான மறைபொருளை அவர் விளக்கினார். 6. திருச்சட்டத்தின் நோக்கங்களை மேம்படுத்தும் கூடுதலான வழிமுறைகளை (மத்தேயு 5.18-48) அவர் வழங்கினார்.
கிறிஸ்து தம்மையே பலியாக கொடுத்ததினிமித்தம் சமய சடங்குகளை (Ceremonial Laws) நிறைவேற்றி விட்டதால், நாம் பலியிட வேண்டிய அவசியமில்லை. இயேசு யூத கலாச்சாரத்தின்படியே வாழ்ந்தாலும் யூதர்கள் செய்த தவறுகளை எதிர்த்தார். அதே நேரத்தில், நம்முடைய வாழ்வின் நெறிமுறைகள் கிறிஸ்துவின் வாழ்வையும், சாட்சியுள்ள ஜீவியத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் (Civil Law). இயேசு கிறிஸ்து கடவுளை முழுமையாக நேசி; உன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசியென்று கற்றுக்கொடுத்துள்ளார் (Moral Law). நாம் எவ்விதமாக வாழ வேண்டும் என்பதற்கு கிறிஸ்து மாதிரியாகவும், தூயாவியார் வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
அப்போஸ்தலராகிய பவுல் சொல்லிகிறார்: (ரோமர் 8.3-4) அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். ஆகவே, கடவுளின் பிள்ளைகளாகிய நாமும் கிறிஸ்துவின் நீதி நம்மில் நிறைவேற அவரைப் போல வாழ்வோம்.
0 Comments