உலகிற்கு ஒளி
யோ. ஆபிரகாம் ராஜ சுந்தர் B.A.,
BD - 3, கால்வின் இறையியல் ஸ்தாபனம், ஹைதரபாத். மேலபட்டமுடையாபுரம் அடைக்கலப்பட்டணம் சேகரம் CSI திருநெல்வேலி திருமண்டலம்
click here to download pdf of Meditation 12
தியான பகுதி: மத்தேயு 5.14-16
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
தியானம்
இயேசு தன்னுடைய மலைப்பொழிவில், தம்முடைய சீடர்களுக்கும், தம்மைத்தேடி வந்த ஜனங்களுக்கும். அநேக காரியங்களை உபதேசித்தப் போது, சொன்னது: “நீங்கள் உலகிற்கு (φῶς – phos – Light) ஒளியாயிருக்கிறீர்கள்.”
இருள் மட்டும் இருந்த போது ஒழுங்கின்மையம் ஒரு வெறுமையுமாக காணப்பட்டதென்றும், வெளிச்சம் நல்லது என்றும் ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் பார்க்கிறோம். நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக என்பதை நல்லவர்களாக நன்மை செய்கிறவர்களாக என்று புரிந்துகொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாது மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது என்று சொல்லி உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கின்றவர்களைக் குறித்து, உவமையாக சொல்லுகின்றார். இவ்வாறு மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைவு இல்லாததாக இருக்கின்றதோ, அதுபோல நன்மை செய்கின்ற மனிதனும் இருக்கின்றான். அம்மனிதன் இந்த சமுதாயத்தில் நன்மையினால் நிறைந்திருக்கிறான் என்றறிந்து கொள்ள முடியும்.
விளக்கைக் (Lamp) கொளுத்தி மரக்காலால் (Under the Basket) மூடி வைக்காமல் விளக்குத் தண்டின் (Lampstand) மேல் வைப்பார்கள் என்று உவமையாக இயேசு சொல்லுகிறார். விளக்கை விளக்கு தண்டின் மேல் வைத்தால் தான் எல்லோருக்கும் வெளிச்சம் கொடுக்கும் அது போல கிறிஸ்துவைப் பின்பற்றுவோரும் நான், என்னுடையது என்று இராமல், முழு சமுதாயத்திற்கும் நல்ல காரியங்களை செய்யும்போது இந்த உலகத்தில் ஒளியாக வாழ முடியும்.
இந்த விதமாக நம்முடைய நல்ல செயல்களை, (Good Deeds) மற்றவர்கள் கண்டு பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதாவை மகிமைப்படுத்த வேண்டும். தேவையுள்ள மற்றவர்களுக்கு உற்ற நேரத்தில் நாம் உதவிகள் நாம் செய்கின்ற நற்கிரியை ஆகும். நம்முடைய நற்காரியங்கள் ஆண்டவரைப் புகழ்கின்ற அளவுக்கு அதாவது, இவர்கள் கிறிஸ்தவர்கள், எனவே இவர்களுடைய வாழ்க்கை இப்படிப்பட்டதாக இருக்கிறது என்று பிறர் சொல்லுமளவுக்கு நம்முடைய நற்செயல்கள் இருக்க வேண்டும்.
உதாரணமாக. திருமுழுக்கு யோவானின் வாழ்க்கையின் மூலம் இறை நாமம் மகிமைப்பட்டதை திருமறையில் காணமுடியும். திருமுழுக்கு யோவானைக் குறித்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாட்சியாக சொன்னது; (யோவான் 5.35) “அவன் எரிந்து பிரகாசிக்கின்ற விளக்காயிருந்தான்.” அதைப்போல நாமும் அநேகம் பேருக்கு வெளிச்சம் கொடுக்கின்ற அவர்களாக நல்லவர்களாக இருக்க வேண்டும்.
சிந்தனைக்கு…
யோவான் 8.12 இல் இயேசு மக்களை நோக்கி சொன்னது: “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.” அந்த ஒளியாகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்து நாம் நல்ல ஒளியை பெற்று பிறருக்கு ஒளி விளக்காய் வாழ கடவுள் உதவி செய்வாராக, ஆமென்.
0 Comments