கணிதம் ஒரு சுவாரஸ்யமான மற்றும் ஈர்க்கக்கூடிய பாடமாகும். சிலருக்கு இந்த பாடத்தில் ஜஸ்ட் பாஸ் ஆனதே பெரிய வியப்பாக தெரியும்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14 அன்று சர்வதேச கணித தினம் உலகளாவிய அளவில் அனுசரிக்கப்படுகிறது.
முதல் சர்வதேச கணித தினம் 2007 மார்ச் 14 அன்று கொண்டாடப்பட்டது.
சர்வதேச கணித தினத்தின் முக்கிய குறிக்கோள்கள்: கல்வியில் கணிதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய பொது மக்களிடையே புரிதலை மேம்படுத்துதல், நவீன சமுதாயம், அறிவியல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் கணிதத்தின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்; கணிதம் பற்றிய தகவல்களுக்கான அணுகலை அதிகரித்தல், மற்றும் கணிதம் பற்றிய பொது விழிப்புணர்வில் ஒத்துழைப்பை அதிகரித்தல் ஆகும்.
பல நாடுகளில் மார்ச் 14 பை தினமாக கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இந்த தேதி 3/14 என எழுதப்பட்டதால் தான், கணித மாறிலி பை தோராயமாக 3.14 ஆகும்! எனவே, இந்த நாள் கணிதத்தைப் பற்றியது!
மேலும் அனைவரும் கணிதத்தின் அடிப்படை கருத்துகளைக் கணிதத்தைக் கற்றுக்கொள்வோம், கணிதத்தை அனுபவிப்போம், மற்றும் கணிதத்தை முழு மனதுடன் கொண்டாடுவோம்!
0 Comments