(பரிசுத்த நற்கருணை ஆராதனையாக இருந்தால் குருவானவர் தேவ கோபாக்கினை கூறல் புத்தகத்தைப் பயன்படுத்தலாம். click here to download pdf of Deva Kobaakkinai Kural இல்லாவிட்டால் காலை / மாலை ஆராதனை முறைமையை கீழுள்ளவாறு பின்பற்றலாம்)
முகவுரை வசனம் / பாடல்
ஆரம்ப ஜெபம்
(எழுந்து நின்று)
ஆரம்ப பாடல்
பாவம் உணர அழைப்பு
ஆராதனை நடத்துகிறவர் யோவேல் 2.11 முதல் 18 வரை வாசித்து அழைப்பு கொடுக்கலாம்.
(முழங்கால்படியிட்டு ஜெபிப்போம்)
பாவ அறிக்கை
எல்லாரும் சேர்ந்து சங்கீதம் 51 ஐ
வாசிக்கலாம்.
பாவ விமோசனம்
ஒருவன் பாவஞ்செய்வானானால்
நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து
நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து
பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய
பாவங்களை நிவிர்த்தி செய்கிற
கிருபாதாரபலி அவரே; நம்முடைய
பாவங்களை மாத்திரம் அல்ல,
சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி
செய்கிற பலியாயிருக்கிறார். ஆமென்.
(சுருக்கமாக நடத்த வேண்டும் என்றால், இதற்கு அடுத்து, நேரடியாக லித்தானியா நடத்திவிட்டு, வேத பாடம், செய்தி என நடத்தலாம்; இல்லாவிட்டால்...)
கர்த்தர் கற்பித்த ஜெபம்
பரமண்டல..... ஆமென்.
ஆ. ந. ஆண்டவரே எங்கள் உதடுகளை திறந்தருளும்.
சபை. அப்பொழுது எங்கள் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
ஆ. ந. ஆண்டவரே எங்களை இரட்சிக்க விரைவாய் வாரும்.
சபை. ஆண்டவரே எங்களுக்கு சகாயம் பண்ணத் தீவிரியும்.
(எல்லாரும் எழுந்து நிற்க)
ஆ. ந. பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கு மகிமை உண்டாவதாக.
சபை. ஆதியிலும் இப்பொழுதும், எப்பொழுதுமான சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
ஆ. ந. கர்த்தரைத் துதியுங்கள்.
சபை. கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
முறைமை சங்கீதம்
சங்கீதம் 102 முழுவதும் / 1 - 12
(உட்காரக்கடவோம்)
திருமறை பாடங்கள்
தானியேல் 9. 1 - 20 / யோனா 3. 1- 10
மத்தேயு 11. 20 - 30 / எபிரெயர் 13. 8 - 16
அப்போஸ்தல விசுவாச பிரமாணம்
வானத்தையும் பூமியையும்..... ஆமென்.
(முழங்கால்படியிட்டு ஜெபிப்போம்)
லித்தானியா ஜெபம்
ஜெப புத்தகம் 33 ஆம் பக்கம்
பிரசங்க ஆயத்த பாடல்
பிரசங்கம்
காணிக்கை பாடல்
நிறைவு ஜெபம்
ஆசீர்வாதம்
முடிவு கவி
ஆ. ந. கர்த்தர் உங்களோடு இருப்பாராக.
சபை. அவர் உமது ஆவியோடும் இருப்பாராக.
ஆ. ந. இறை சமாதானத்தோடே சென்று வாருங்கள்.
சபை. கர்த்தருடைய நாமத்தினாலே, ஆமென்.
0 Comments