Ad Code

31. முதலில் இறைவனைத் தேடு | கா. ஜெபஸ்டின் | Strive First God | மத்தேயு 6.33-34 Matthew | Seek God

 

முதலில் இறைவனைத் தேடு

கா. ஜெபஸ்டின்  BE                                 மேட்டூர் சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்

BD – 4, பேராயர் கல்லூரி, கல்கத்தா.                             


click here to download pdf of Meditation 31

தியானப் பகுதி (Meditation passage) மத்தேயு 6: 33-34

33முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். 34ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.  

 

முகவுரை (Prologue)

மத்தேயு 6:33-34-ம் வசனமானது இயேசுவின் மலை சொற்பொழிவின் ஒரு முக்கிய அங்கமாக காணப்படுகிறது. மத்தேயு 6:19-32 வரை பார்க்கும் போது உலக வாழ்வின் தேவைக்கான தேடலான உண்ண உணவு, உடுக்க உடை,  நம்மை கவலைக்குள்ளாக ஆழ்த்துகிறது என்றும், அவ்வாறு உலகில் வாழ்வதற்கான தேவையை தேடுகின்ற அஞ்ஞானிகள் அல்லது பிற இனத்தவர்கள் Gentiles)  என்பவர்கள் கடவுளைத் தேடாதவர்கள், அவருக்கு முக்கியத்துவம் அளிக்காதவர்கள், மற்றும் அவருக்காக செயல்படாதவர்கள். இவர்களைப் போலன்றி, கிறிஸ்துவைப் பின்பற்றுகின்றவர்கள் நம் தந்தையாம் கடவுளை முதலில் தேடவும், இறையரசின் சாட்சிகளாய் வாழவும் அழைக்கப்படுகின்றோம்.

 

தியானம்

"முதலாவது" (The First) என்கிற தமிழ் வார்த்தையானது கிரேக்க வார்த்தையில் "Protos" (πρώτος) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முதன்மையான (Chief) அல்லது முக்கியமான (Foremost) என்று பொருள்ப்படுகிறது. இது ஒரு நிலையை குறிக்கிறது (Position, Rank, Importance). அதேபோல "தேடு" என்கிற தமிழ் வார்த்தை கிரேக்கத்தில் "Zēteō" (ζητω) என்று அழைக்கப்படுகிறது, இது  தேட வேண்டும் (To Seek), அல்லது தேட முற்பட வேண்டும்  (To strive to Find) அல்லது ஒன்றை தேடுவதற்கு ஆசை (Desire) கொள்ள வேண்டும் அல்லது நாடிச் செல்ல வேண்டும்  என பொருள் படுகிறது. எனவே நம்முடைய வாழ்க்கையில் முதலாவது யாரை? எதை? தேட வேண்டும் அல்லது தேடுவதற்கு முற்பட வேண்டும் அல்லது எதை தேடுவதற்கு ஆசை கொள்ள வேண்டுமென்று பின்வரும் மூன்று தலைப்புகளின் அடிப்படையில் சிந்திக்க இருக்கிறோம்.

 

1. முதலில் இறைவனைத்  தேடுங்கள்  (Seek God First)

கடவுளை நாம் ஏன்? எதற்காக?  தேட அல்லது நாட  வேண்டும். கடவுளை நாம் நம்முடைய சுய ஆசீர்வாதங்களுக்காக தேட கூடாது.  நோவா கடவுளை தேட முக்கியத்துவம் கொடுக்காத மக்கள் மத்தியில் வாழ்ந்தாலும்  அவன்  கடவுளுக்கு முக்கியத்துவம் அளித்து அவரோட சஞ்சரித்து கொண்டிருந்தார். இது எதை குறிக்கிறது என்றால் நம்மை சுற்றியிருக்கிற சூழ்நிலை கடவுளை தேடுவதற்கு இடையூறாக இருந்தாலும்கூட கடவுளோடு நடக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறார். தானியேல் உண்மையான கடவுளை வணங்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டபோதும், கடினமான சூழ்நிலைகள் வந்த போதும் கர்த்தரை தேடுவதை குறைக்கவில்லை.  கஷ்டங்கள், துன்பங்கள் வந்த போதும் தங்களுடைய சாட்சியான வாழ்க்கையின் முலம் ஆண்டவருடைய திருப்பெயரை மகிமைப் படுத்தினார்கள். இதனால் அவர்களை கடவுள் கைவிடவில்லை. கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது என்று வேதம் நமக்கு கற்று கொடுக்கிறது (சங்கீதம் 34:  10).

 

நம்முடைய வாழ்க்கையிலும் நாம் எந்த பகுதியில், எந்த சூழ்நிலையிலிருந்தாலும். கடவுளை தேட மறக்கக் கூடாது. ஏனென்றால்,  கடவுள் நம்மீது கொண்ட அன்பினாலே,  தன்னுடைய ஓரே மைந்தனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பி, அவர் முலமாக அவரிடம் (கடவுளிடம்)  கிட்டிச் சேரும் ஆசீர்வாதத்தை நமக்கு தந்திருக்கிறார். இயேசுவை தேடி நாடுவோம் கடவுள் அண்டை கிட்டிச் சேருவோம். இயேசு கிறிஸ்துவின் ஊழிய பயணத்தில் அவரை தேடி, நாடி அநேக மனிதர்கள் சுற்றிவந்தார்கள். ஏனென்றால் அவருடைய பேர் புகழானது அநேக இடங்களில் சிறந்து விளங்கியது. சில பேர் அவரிடம் எதாவது சுகத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், சில பேர் அவருடைய போதகத்தை கேட்பதற்காகவும், சில பேர் அவரிடம் குற்றம் கண்டுபிடிப்பதற்காகவும், அவரை தேடினார்கள் (பரிசேயர்கள் & சதுசேயர்கள்). நாம் கடவுளை எப்படி தேடுகிறோம்?  நம்மை நாமே சிந்தித்துப் பார்ப்போம்.

 

2. முதலில் இறையாட்சியைத் தேடுங்கள் (Seek God's Kingdom First)

 ஆட்சி என்கிற தமிழ் வார்த்தையானது கிரேக்க மொழியில் "Basileia" (Βασιλεία) என்று அழைக்கப்படுகிறது. இதனுடைய அர்த்தம் அரசரின் வல்லமையோடும், ஆளுகையோடும் கொண்டு வழி நடத்தப்படுகின்ற அரசாட்சி (The Royal Dominion or form of Government). கடவுளின் ஆட்சியானது அவருடைய வல்லமையோடும், ஆளுகையோடும் வழிநடத்தப்படுகிறது. பல நேரங்களில் மனிதர்கள் தாங்ககளாகவே தேர்ந்தெடுத்த ஆட்சியானது, பின்பு மக்கள் விரும்பாத ஆட்சியாக மாறிப்போகிறது. ஏனென்றால் அவர்களுடைய ஆட்சியானது நம்பகதன்மை அற்றதாக மாறிப்போகிறது, காரணம் ஏற்றத்தாழ்வுகள் (Inequalities), பாகுபாடுகள் (Partiality), சமாதானம் அற்ற (Peacless) சூழ்நிலை, நீதியற்ற சூழ்நிலை (Injustice)  எங்கு நோக்கினும் சண்டைகள் (Fight) வகுப்புவாத பிரிவினைகள் (Groupism) காணப்படுகின்றன. ஆனால் கடவுளின் ஆட்சியானது, ….நீதியும் (Justice), சமாதானமும் (Peace), பரிசுத்த ஆவியினாலுண்டாகும் (Joy with Holy spirit)  சந்தோஷமுமாயிருக்கிறது (ரோமர் 14:17). அதில் சண்டைகள், பிரிவினைகள்,பாகுபாடுகள் இல்லாமல் அது மகிழ்ச்சி,  சமாதானம், நீதி நிறைந்ததாகவும் காணப்படுகிறது.

 

இயேசு கிறிஸ்துவின் ஊழிய துவக்கத்தில் பரலோக ராஜ்யம் சமிபித்திருக்கிறது என்று அவருடைய இருப்பு நிலையை குறிப்பிடுகிறார். எனவே கடவுளின் ஆட்சி எங்கு இருக்கிறதோ அங்கு நீதி, சமாதானம், மகிழ்சியானது இருக்கிறது. இயேசு எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் நீதியை நிலை நாட்டினார், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட, ,கைவிடப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்விலே அவர் நீதி, அமைதி, மகிழ்ச்சியை  கொண்டு வந்தார். நாம் உலகத்தின் ஆட்சியை தேடாமல் கடவுளின் ஆட்சியை தேட  அழைக்கப்பட்டிருக்கிறோம்.

 

3. முதலில் இறைநீதியை (ஏற்புடையதை) தேடுங்கள் (Seek God's Righteousness or Will First).

முதலாவது கடவுளை தேடுகிறார்கள், அவருடைய இராஜ்யத்தையும் ,அவருடைய நீதியையும் தேடுவார்கள். இங்க நீதி என்கிற தமிழ் வார்த்தைக்கு கிரேக்கத்தில் "dikaiosunē" (δικαιοσνη) என்று அழைக்கப்படுகிறது. அதாவது கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது கட்டளையிடப்பட்ட செயலை மனிதன் செய்வதை  குறிக்கிறது ("The character and acts of a man commanded by and approved of God") சுருக்கமாக  கடவுளின் சித்தத்தை செய்ய வேண்டும் என்று பொருள்ப்படுகிறது. இங்கு இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களும்  கடவுளின் சித்தத்தை செய்வதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று கற்றுக் கெடுக்கிறார்.

 

நாம் நம்முடைய விருப்பத்தையோ அல்லது நமக்கு இஷ்டமானதையோ கடவுளின் ஊழியத்தில் செய்யகூடாது.  மத்தேயு 7:21 படி கடவுளின் திருச்சித்தப்படி செய்பவர்களை கடவுளின் இராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள். இயேசு கிறிஸ்து சிலுவையின் மரணபரியந்தம்  பிதாவுக்கு கீழ்படிந்தவராய், அவருடைய சித்தமாகிய (திட்டம்) மனிதகுலத்தை பரலோக இராஜ்யம் சேர்க்க ( Salvation)  தன்னையே வெறுத்து பிதாவின் சித்ததை நிறைவேற்றினார்.

 

 

சிந்தனைக்கு…

நீதிமொழிகள் 9:10-ல் கர்த்தருக்குப் பயப்படுதலே (Respect, Honor, ect..)  ஞானத்தின் ஆரம்பம்; என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் முலம் கடவுளின் மீது வைத்திருக்கின்ற பக்தி, கடவுளை சார்ந்த செயல்பட்டை செய்வது, அவருக்கு முதலாவது (First priority) இடத்தை கொடுப்பவர்கள் தான் ஞானிகள். கடவுளை நம்பாதவர்கள், தேடாதவர்கள் மதியினர் ஆவர்கள். சாலமோன் கடவுளை தேடினபோது, அவரிடமிருந்து உலக சம்பத்தை, ஐஸ்வரியத்தை கேட்காமல் ஞானத்தை கேட்டார். கடவுள் அவருக்கு ஞானத்தினால் மட்டும் அல்ல உலக சம்பளத்தையும் ஐஸ்வரியத்தையும் அவனுக்கு கொடுத்து அவனை ஆசிர்வதித்தார் (2 நாளாகமம் 1:4-13).

 

இன்றைக்கு கடவுள் நம் ஒவ்வொருவரையும் அவருடைய திருப்பணியை செய்ய அழைத்திருக்கிறார்.  கடவுளின் சித்ததை செய்ய நம்மை அர்ப்பணிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அவர் நிமித்தமாக நாம் நம்  உலக பொருட்கள், சொந்த பந்தங்களை, படிப்பு, வேலை, அந்தஸ்து என எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவருடைய ஊழியத்திற்கு வந்திருக்கலாம் ஆனால் அவை எல்லாவற்றிக்கும் பதிலாக பரலோக ராஜ்யத்தில் மிகுந்த பலனை கொடுப்பார். எனவே நாளைய தினத்தை குறித்து கவலைபடாமல் முதலாவது கடவுளையும், அவருடைய இறையரசையும், அவருடைய நீதியையும் தேடுவாம். நாம் கடவுளை முதலாவது தேடுகின்ற போது அவர் நம்மை ஞானிகளாக மாத்திரமல்ல, நாம் உலகத்தில் வாழ்வதற்கு தேவையான  அனைத்தையும் தந்து நம்மை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

 


Post a Comment

0 Comments