Ad Code

33. தனித்துவமிக்க தூய்மை | ரா. கிறிஸ்து ராசையா | Uniqueness of Holyness | மத்தேயு 7.6 Matthew

H

தனித்துவமிக்க தூய்மை

 ரா. கிறிஸ்து ராசையா B.A,     சிவசைலனூர் சேகரம், புலவனூர், CSI திருநெல்வேலி திருமண்டலம்    BD - 3, ஐக்கிய வேதாகம கல்லூரி, புனே.         

 

click here to download pdf of Meditation 33

தியானம்    மத்தேயு 7:6

பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.

 

தியானம்

பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும் செயல்களில் வல்லவருமாகிய இயேசு கிறிஸ்து,  பரிசுத்தமானதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக்கொடுப்பதை இத்தியானத்தில் பார்ப்போம். இந்த வசனம் எழுதப்பட்டுள்ள சூழலைப் பார்க்கும்போது, மத்தேயு 7:6-ல் மாயக்காரனே எனக் குறிப்பிடுகிறார். நியாயத்தைப் புரட்டுபவர்கள், சத்தியமானதை புரட்டிப் பேசுபவர்கள். இப்படிப்பட்ட மாயக்காரரிடம் பரிசுத்தமான ஆண்டவருடைய காரியங்களைக் குறித்துப் பேசுவது என்பது அதனைக் கெடுக்கும் என ஆண்டவர் கூறுகிறார்.

           

இங்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாய்கள், பன்றிகள் விலங்கினை மேற்கோள்காட்டிக் கூறுகிறார். ஏனென்றால் நாய்கள் நன்றி உள்ளதாய் இருந்தாலும் வீட்டு வளர்ப்பில் இல்லாவிட்டால், அவை அசுத்தமானவை என்று அக்காலத்தில் எண்ணப்பட்டது. யூதர்கள் அருவருப்பாக கருதிய பன்றியும் இக்கூட்டத்தைச் சேர்ந்தது தான். அவைகளுக்கு சேறும், முத்தும் ஒன்று தான். அவைகளால் முத்துக்கள் அசுசி ஆகிவிடும்.  நீதிமொழிகள் 11:22 இல் வாசிக்கிறோம், “மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.” இன்னும் சுருங்கக் கூறின் ‘குரங்கு கையில் பூமாலை கொடுத்த வண்ணம்’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.

 

நாம் ஆண்டவருடைய வார்த்தையை போதிக்கும்போதும், சுவிசேஷம் சொல்லும்போதும் கவனமாக செயல்பட வேண்டும். திறக்கப்பட்ட இதயத்தோடு, தேவையோடு இருக்கும் இதயத்துக்கு ஆண்டவருடைய நற்செய்தியை சொல்ல வேண்டும். அதே நேரத்தில் மாயக்காரரை போன்ற மனிதர்களிடத்தில் ஆண்டவருடைய காரியத்தை கொடுப்பதை விட்டு விட வேண்டும். இரண்டிலும் நாம் பகுத்தறிவோடு, தூய ஆவியானவரின் வழிநடத்துதலோடு செயல்பட வேண்டும். அப்படி செய்தால் ஆண்டவருடைய காரியம் அசுசிப்படாமல் காத்துக்கொள்ளப்படும்.

 

சிந்தனைக்கு…

சாலொமோன் ஞானி இவ்விதமாக சொல்லுகிறார்: பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான் (நீதிமொழிகள் 9:7). மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டைபண்ணுவான் (நீதிமொழிகள் 23:9). நம்முடைய இரட்சண்ய வாழ்வும் உளத்தூய்மையும், நற்குணங்களும் மாணிக்கம் போன்றவை. இந்த மண்ணிற்காக அவற்றை விட்டுவிடவாழ ஆண்டவர் உதவி செய்வாராக.

 

                    


Post a Comment

0 Comments