🌴மூல பதமான எபிரெயத்தில் ஓசன்னா (yasha-na Hosanna) என்ற பதத்தின் நேரடி அர்த்தம் 'இரட்சியும் / காப்பாற்றும்' (save) என்பதாகும்.
🌴'கர்த்தாவே இரட்சியும்' என்று சங்கீதம் 118.25 இல் வருகிறது.
🌴இது உதவியைக் கேட்பதையும் (cry for help), மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தொனியாகவும் / (cry for happiness) பயன்பாட்டில் உள்ளது.
🌴லூக்காவைத் தவிர மற்ற மூன்று நற்செய்திகளிலும் 6 முறை இந்த பதம் வருகின்றது (மத்தேயு 21.9, 15; மாற்கு 11.9,10, யோவான் 12.13).
🌴இது இயேசு என்ற பெயரின் அர்த்தத்தோடு தொடர்புடையது. இந்த பதமானாது இரட்சகராக வந்த இயேசுவின் மேசியாத்துவத்தை, இரட்சகரே என்ற தொனியில் புகழ்வதற்கும் (Exclamation of Adoration) பயன்படுத்தப்படுகின்றது.
🌴ஓசன்னா! என்று மக்கள் இரட்சிப்புக்காக கூக்குரலிட்டார்கள். அந்த இரட்சிப்பை இயேசு சிலுவையில் சம்பாதித்துக் கொடுத்தார். நாமும் அந்த நம்பிக்கையில் ஓசன்னா என்ற தொனியெடுத்து இறைப்புகழ் பாடி மகிழ்வோம்.
0 Comments