Ad Code

பெரிய அதிசயங்கள் | Great Marvels | 2022 மே மாதப்பிறப்பு அருளுரை

முகவுரை
இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். கிருபையின் சங்கீதம் அல்லது துதியின் சங்கீதம் என்றழைக்கப்படும் 136 ஆம் சங்கீதத்தில் சங்கீதக்காரர் இறைவனைப் போற்றிப் பாடுகையில், "ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்" என்று அழைப்புவிடுக்கிறார். 

1. தனித்து செய்கிறார்
எல்லாம் வல்ல கடவுள் இத்துணை பெரிய அதிசயங்களை தனித்தே செய்கின்றார். எபிரேயத்தில் வரும் (בּד - bad - Alone) வார்த்தையானது 'தனித்து' என்ற பொருளைத் தருகிறது. ஆம் அவர் தாம் ஒருவராக பெரிய காரியங்களை செய்ய வல்லவர்.

2. பெரிதாய் செய்கின்றார்
பெரிய என்ற வார்த்தைக்கு வரும் எபிரேய மூல பதமானது, (גָּדוֹל - gadol - Great) இதைக் காட்டிலும் பெரியது வேறொன்றும் இல்லை என்பதை குறிக்கும் சொல்லாகும். ஆம் கடவுளின் மாபெரும் அருஞ்செயல்கள் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு பெரிதாக இருக்கும்.

3. என்றும் செய்கின்றார்
ஏதோ ஒரு முறை பெரியதாக ஏதோ ஒன்றை செய்தார் என்று கடந்த காலத்தை மட்டும் சார்ந்ததல்ல நம் நம்பிக்கை. கடவுளின் கிருபை என்றும் உள்ளதென்றால், அவர் செய்யும் காரியங்களும் என்றும் எக்காலத்திலும் நிலைத்து நிற்கக்கூடியது.

நிறைவுரை
கடவுள் எப்படி தனித்துவமிக்க பெரியவரோ, அவ்வண்ணமே அவர் செய்யும் காரியங்களும் மனிதர்களுக்கு எட்டாத வகையில் தனித்துவமிக்கதாக, பெரியதாக இருக்கும். அதை எண்ணி ஒவ்வொரு நாளும் நாம் துதிப்போம். அவர் கிருபை என்றும் உள்ளது. அவர் ஒவ்வொரு நாளும் பெரிய அதிசயங்களை நம் வாழ்வில் செய்வாராக. ஆமென். 

Post a Comment

0 Comments