Ad Code

IMS மிஷனரி ஆசிரியராக ஒரு வாய்ப்பு | Teaching Ministry in IMST Schools | Teachers Needed

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,
        அன்பின் வாழ்த்துகள். இந்திய மிஷனரி சங்கமானது (IMS), நம் தாய்த்திரு நாட்டில் நற்செய்தி பணியை மிக சிறப்பாக 1903 ஆம் ஆண்டு முதல் செய்துவருகின்றது. நற்செய்தி அறிவித்தல், கல்விப்பணி, மருத்துவ சேவை, கைத்தொழில் கற்றுக்கொடுத்தல், சபைகளை உருவாக்குதல் என பல்வேறு வகையான ஊழியங்கள் இதன் மூலம் நடைபெறுகின்றன.click here to read IMS History
        
        அதில் குறிப்பாக சத்தீஸ்கர், ஓடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உயர்நிலை அல்லது மேல்நிலை என எட்டு பள்ளிகள் வாயிலாக தரம்மிக்க ஆங்கில வழி கல்வி கொடுக்கப்படுகின்றது. இங்கு நிரந்தர மிஷன் ஆசிரியராகவோ அல்லது தற்காலிக (1 அல்லது 2 ஆண்டுகள்) மிஷன் ஆசிரியராகவோ பணியாற்ற, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், கல்வியியல் பட்டம், மற்றும் பொறியியல், முடித்த வாலிப ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
        
            பாதுகாப்பான தங்குமிடம், நல்ல இட அமைப்பு, ஆலய ஆராதனைகள், சிறப்பு கூடுகைகள், உணவு வசதி என எல்லாம் அங்கே இருக்கின்றது. நாம் கடவுளோடு நெருங்கி சேரவும், மற்றவர்களை கடவுளண்டை நடத்தவும் சிறந்த வாய்ப்பு இது. 
        
        இதைக் குறித்து மேலும் அறிய தொடர்புக்கு,
            இந்திய மிஷனரி சங்க அலுவலகம்,
            ஊசி கோபுர பேராலயம் அருகில்,
            பாளையங்கோட்டை,
            திருநெல்வேலி - 627 002.
            📞 94881 01942


        

        

Post a Comment

0 Comments