ஒரு கோடை விடுமுறையின் போது, FMPB இன் நண்பர்கள் தமிழ்நாட்டில் வெளி (Outreach) ஊழியம் செய்வதற்காக, ஓசூருக்கு அருகிலுள்ள பஞ்சமலை (பெரியமலை) என்ற மலையில் உள்ள பெட்டமுகுலாலம் என்ற இடத்திற்குச் சென்றனர். பெங்களூரில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவிலுள்ள அந்த இடத்தில் நற்செய்தி அறிவித்தனர். "அய்யா இங்கயே தங்கி அந்த இயேசு கடவுள சொல்லமாட்டீங்களா?" என்ற முதியவரின் ஏக்கம் தான் ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் மலர காரணமானது.
ஒரு மிஷனரியை அவசரமாக வைக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் இங்குதான் உணர்ந்தார்கள். இந்த தேவையை கோவில்பட்டி என்ற இடத்தில் கூடி இருந்த நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர். பரிசுத்த ஆவியின் தூண்டுதலால், திரு. ஹாரிஸ் ஹில்டன் மற்றும் அவரது மனைவி இந்த அழைப்பிற்கு பதிலளித்து, முன்னோடி மிஷனரிகளாக பெரியமலைக்குச் சென்றனர். இதனால் 1967-ம் ஆண்டு பெரியமலையில் முதல் மிஷன் பணித்தளம் திறக்கப்பட்டது.
"ஊருக்கொரு ஒரு மிஷனெரி பாருக்குள் அனுப்பிட ஆளுக்கொரு கை ஆண்டவருக்காக வை" என்ற விசுவாச முழக்கத்தோடு தமிழ் மண்ணில் வைராக்கியத்தோடு வலம் வந்தது.
இந்திய துணைக்கண்டத்தில் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு இன்று ஆல்போல் தழைப்பதற்கு கடவுளின் கிருபையும், பலரின் ஜெபங்களும், பூரணமாய் ஒப்புக்கொடுத்த மிஷனெரிகளின் அர்பணிப்புமே காரணம். அண்டவருக்கே மகிமை உண்டாவதாக.
ஜெபமே இதன் உயிர்மூச்சு!
ஜெபக்குழு இதன் முதுகெலும்பு!
ஜெபக்குழு தலைவர்கள் இதன் அச்சாணி!
இன்றும் கோடான கோடி இந்தியர்களை சந்திக்க ஜெபிக்கும் உள்ளங்களும், தியாகமாய் கொடுப்பவர்களும், தன்னார்வமாய் செயல்படும் விசுவாச வீரர்களும் தேவை...
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்!
0 Comments