⚡தென் இந்திய திருச்சபைக்கான முன்னோட்டம் ⚡
"அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக் கிறதற்காக, நீர் என்னிலேயும், நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்கிறேன்". யோவான்.17:21.
சபைகள் உடைந்தும் பிரிந்தும் கிடப்பதை இணைக்க வேண்டிய அவசித்தைப் பற்றி சில மாணவர்கள் பல்லாண்டுகளுக்கு முன் தரங்கம்படி கடற்கரையில் உட்கார்ந்து யோசித்தும், தர்க்கித்தும் ஊக்கத்தோடு ஜெபித்தும் வந்தார்கள்.
டோர்னகல் பேராயத்தின் முதல் பேராயர் V.S.அசரியா ஒரு முறை ரயிலில் பிரயாணம் செய்தபொழுது Dr.அம்பேத்காரை சந்தித்தார். பேராயர் கிறிஸ்தவத்தைப் பள்ளி அவரிடம் பேசிவிட்டு நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் இயேசுவின் அடியவராக விரும்புவதைப் பற்றி எண்ணுவீர்களா என கேட்டபொழுது அவர் கூறினார். நாங்கள் கிறிஸ்தவத்தில் இணைந்தால் எங்கள் ஐக்கியம் முறிந்து போகும்.
இது பேராயர் அசரியாவுக்கு ஒரு சவாலாகத் தோன்றியது. 1919 ம் ஆண்டு இந்திய கிறிஸ்தவ தலைவர்களுக்கு ஒரு மாநாடு தரங்கம்பாடியில் நடைபெற்றது. அதில் ஒரு இந்திய தலைவர்கள் கலந்து கொண்டனர். பேராயர் அசரியா அவர்களும் அதில் கலந்து கொண்டார். தரங்கம்பாடி மாநாட்டு அறிக்கை நாம் பலவீனமுள்ளவர்களாய் இருக்கிறோம் ஏனெனில் நம்மிடையே ஒற்றுமை இல்லை. நாம் ஒருமைப்படுவோம். மக்களைக் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தும்படிக்கே ஒன்றாக இணைவோம். பேராயர் அசரியா தனது இறுதி மூச்சு விடும் வரைக்கும் சபைகளின் ஐக்கியத்திற்காக அயராது உழைத்தார்.
ஆங்கிலேய சபை (Angelican Church) மெத்தடிஸ்ட் சபை, மக்களால் நடத்தப்படும் சபை (Congregational Church) கிறிஸ்தவ குருவால் நடத்தப்படும் சபை (Presbyterian Church) சீர்திருத்த சபை (Reformed Church) எல்லா திருச்சபைகளையும் ஒன்றாக இணைத்து ஒரே திருச்சபையாக உண்டாக்க வேண்டும் என்பதற்காக திருச்சபை தலைவர்களுடன் கலந்து ஆலோசித்தார்.
⚡தென் இந்திய திருச்சபை அமைப்பு⚡
சபைகளின் ஒருமைப்பாடு பற்றி எல்லா சபைகளும் கலந்து ஆலோசித்த பின்னர் வேதாகமம் தான் நமது விசுவாசத்திற்கும், செயல்பாட்டிற்கும் அடிப்படை ஆதாரம் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. வரலாற்று பின்னணியம் உள்ள விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளவும், முக்கிய சாக்கிரமெந்துகளான ஞானஸ்நானம், கர்த்தருடைய இராப்போஜனம் ஆகியவை நமது விசுவாசத்திற்கு ஆதாரமும் அவசியமானது என ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்தியா ஆகஸ்டு 15ந் தேதி 1947 ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின், சபைகளின் ஐக்கியம் வலுப்பெற்றது. 27.09.1947 இந்திய திருச்சபையின் பொது கவுன்சில், பாகிஸ்தான், பர்மா, இலங்கை திருச்சபைகள், தென் இந்தியாவில் ஒன்று பட்ட திருச்சபை, தென் இந்திய மெதடிஸ்டு திருச்சபையின் மாநில சினாட் ஆகியவை இணைந்து தென் இந்திய திருச்சபை உருவாக்கப்பட்டது. Click here to Read about logo and motto
இதைத் தொடர்ந்து பேசல் மிஷனைச் சார்ந்த சபைகளும் ஆந்திராவில் உள்ள நந்தியா ஆங்கிலேய திருமண்டலமும் இந்த ஐக்கியத்தில் இணைந்துள்ளன. பேராயரைத் தலைமையாகக் கொண்ட திருச் சபைகளும், பேராயர் தலைமை இல்லாத சபைகளும் சேர்ந்து ஒரே திருச்சபையாக இணைந்து செயல்படுவது கடவுளின் மிகப்பெரிய பரிசாகும். தென் இந்திய திருச்சபை (CSI) சென்னையிலுள்ள தூய ஜியார்ஜ் பேராலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
திருநெல்வேலி பேராலயமும் தென் இந்திய திருச்சபையின் அங்கமாயிற்று. 1.04.1949 ல் மதுரை ராமநாதபுரம் பேராலயம் பிரிக்கப்பட்ட பொழுது ராமநாதபுரம், கீழக்கரை, சாட்சியாபுரம், கொடைக்கானல், சாத்தூர், பன்னியாடிபட்டி ஆகிய சபைகள் மதுரை ராமநாதபுரம் பேராயத்துடன் இணைந்தன.
தென் இந்திய திருச்சபையின் முக்கிய நோக்கம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஆசாரியத்துவ ஜெபமாகிய நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப் போல ஒன்றாயிருக்கும் படிக்கு நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக நிறைவேறும் படியாகவும், தென் இந்திய திருச்சபை வலுமையான சபையாக ஆண்டவரின் ஊழியத்தைச் சிறப்பாக செயல்படவும் ஏற்படுத்தப்பட்டது. தென் இந்திய திருச்சபை 24 பேராயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பேராயத்தின் பிரதிநிதிகளும் தென் இந்திய திருச்சபையின் ஆட்சிக் குழுவாகிய சினாட் அதின் பல கமிட்டிகளிலும் பங்கு பெறுவதால் மற்ற பேராயங்களின் நடபடிக்கைகள், செயல்பாடுகளே அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது.
⚡தென் இந்திய திருச்சபையின் அர்ப்பணிப்பும், பொறுப்பும்⚡
தென் இந்திய திருச்சபை இந்தியாவிலுள்ள ரோமன் கத்தோலிக்கர் அல்லாத திருச்சபைகளில் ஒரு பெரிய சபையாகும். இந்த திருச்சபை இந்திய பண்பாட்டையும் ஆவிக்குரிய தன்மையையும் கடவுளின் இறையாண்மை யையும் பிரதிபலிக்கின்ற சபையாகவும், சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், நலிவுற்றவர்கள், பின் தங்கிய மக்கள், தலித் இன மக்கள், ஆதரவற்றவர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் ஆகியோருக்கு தனது உதவும் கரத்தை நீட்டி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல திட்டங்களையும் உருவாக்கி செயல்பட்டு வருகிறது.
தென் இந்திய திருச்சபை சமூகத்தில் உள்ள தீமைகளை போக்கவும், சமூக நீதிக்காக உழைக்கவும் கல்விப்பணி, மருத்துவ பணி மூலம் மக்களுக்கு சேவை செய்யும் சபையாக திகழ்கிறது. தென் இந்திய திருச்சபை, வட இந்திய திருச்சபைமார் தோமா சபை ஆகிய சபைகள் இணைந்து செயல்பட்டு, வருங்காலத்தில் மற்ற பிற சபைகளையும் இணைக்கவும், ஒருமைப்பாட்டைக் காக்கவும், இயேசு கிறிஸ்துவைப் பற்றி சாட்சி பகரும், வலுமையான திருச்சபையாக வளரும் தரினத்தோடு செயல்படுகிறது.
⚡தென்னிந்திய திருச்சபைக்கு உட்பட்ட திருமண்டலங்கள்⚡
1. சென்னை 1835
2. திருநெல்வேலி 1896
3. கோயம்புத்தூர் 1950
4. வேலூர் 1976
5. தூத்துக்குடி நாசரேத் 2003
6. கன்னியாகுமரி 1959
7. மதுரை ராம்நாடு 1947
8. திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் 1947
9. மத்திய கேரளா 1947
10. தெற்கு கேரளா 1947
11. கிழக்கு கேரளா1983
12. கொச்சி 1947
13. கர்நாடகா மத்திபம் 1971
14. கர்நாடகா வடக்கு 1971
15. கர்நாடகா தெற்கு 1971
16. தோர்ணக்கல் 1912
17. கரிம்நகர் 1978
18. கொல்லம் கொட்டாரக்கரா 2015
19. கிருஷ்ணா கோதவரி 1947
20. மலபார் 2015
21. மேடக் 1947
22. நந்தியால் 1976
23. ராயலசீமா 1947
24. யாழ்பாணம் 1947
Acknowledgement
CSI History
0 Comments