இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரால் உங்கள் அனைவருக்கும் மேயேகோ _இன் 75வது இந்திய சுதந்திர தின வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கின்றேன்.
இந்திய திருநாட்டின் விடுதலைக்கான பயணத்தின் வரலாற்றை திரும்பிப் பார்த்தால், நமக்குக் கிடைத்த இந்த விடுதலை எத்துணை அதிசயமானது என்பது மறுக்க இயலாத உன்மை.
இஸ்ரவேல் மக்களை கடவுள் எகிப்தின்று விடுதலையாக்கியது அதிசயமே... தியாக தலைவர்கள் இறைமக்களின் நலனுக்காக இறையதிசயத்தின் கருவிகளாக செயல்பட்டதும் அதிசயமே...
நம் தாய்த்திருநாட்டில் இன்று நாம் விடுதலையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், அதுவும் அதிசயமே... ஏனென்றால், தியாக செம்மல்களின் வரலாறு அதற்குப் பின்னால் இருக்கின்றது.
பவள விழா சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் நமது வாழ்வும் அதிசயமான விடுதலையில் மகிழட்டும்... பிறரை மகிழ்விக்கட்டும்...
0 Comments